பக்கம்:அந்தமான் கைதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

 பொன் : ஏன்? கூட வேலைக்காரனும் ட்ரைவரும் வந்திருக்கிறார்கள். ஏன் என்ன செய்ய வேண்டும்?

நட : ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்களெல்லோரும் உடனே இதை விட்டுப் புறப்பட வேண்டும்.

காமா : அதுக்குள்ளே என்னடா அவசரம்? இத்தனை நாளைக்கப்புறம் வந்தார்; இன்னும் சாப்பிடக்கூடவில்லை......

நட : அடடே அவருக்குச் சாப்பாடு இப்படி யெல்லாமா செய்வது? வேறு விதமாக வல்லவா செய்ய வேண்டும். அவர் லட்சாதிப் பிரபு. அவர் வீட்டில் இல்லாத சாப்பாடா என்ன? சரி! நீங்கள் புறப்படுங்கள்.

காமா : என்னடா அவசரம்? வந்தவங்களே இப்படி வெரட்றியே!

நட : விரட்டுவதற்கு மாமா கழுதையா என்ன?

பொன் : (திடுக்கிட்டு) என்ன என்னையா கழுதை என்று...

நட : இல்லை, இல்லை, கழுதையில்லை-குதிரை!

பொன் : பார்த்தாயா இன்னும் இந்தச் சின்னப் பிள்ளைப் புத்தியும், முரட்டுத்தனமும் உன்னே விட்டுப் போகவில்லையே!

நட : ஆமாம், நீ மகாப் பெரிய மனுஷன்தான். தெரியும். புறப்படு.

காமா : தம்பி, மாமா......

நட : (கடுங் கோபத்தோடு உரத்த குரலில்) ஆமாம் எல்லாம் எனக்குத் தெரியும். ஆல் ரைட்-திவான் பகதூர், கிளம்பலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/45&oldid=1028884" இலிருந்து மீள்விக்கப்பட்டது