பக்கம்:அந்தமான் கைதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

 நட : ஆமாமா, மாமாவைப் பாடையிலே வைக்கிறதுக்கு நாலு ஆள் வேண்டியதுதான்.

[எல்லோரும் சிரிக்கிறார்கள்; திவான்பகதூர் கோபமாகப் பேசுகிறார்.]

காமா : அடே! ஏண்டா உனக்கு இந்தத் துர்ப்புத்தி?

நட : போதுமம்மா. போதும் உன் ஞானோபதேசம் எல்லாம் எனக்குத் தெரியும். அவன் பட்டம், பதவி எல்லாம் உனக்குத்தான் பெரிது......... அந்த மடை யனின் தங்கைதானே நீ.

காமா : ஆமாம், அந்த மடையனில்லாமே வேறே எந்த புத்திசாலிதான் உன் தங்கையை வந்து கட்டிக்கப் போறான்னு பார்ப்போமே! சேச்சே, இனிமை அரை நாழிகூட இந்த வீட்டிலே இருக்க யோக்கியதை இல்லே.

நட : ஆமாம், ஆமாம், பெரிய திவான்பகதூரின் தங்கையல்லவா நீ? இந்த ஏழைக் குடிசையிலே இருக்கக் கூடாதுதான். நன்றாக மேள தாளத்தோடு இப்பொழுதே வேண்டுமானலும் போகலாம்.

காமா : இல்லை. அவன் இல்லாமே நீதான் என்னெ வச்சுத் தாங்கப் போறே.

நட : இல்லே! இதுவரை அவன்தான் உனக்கு மாதா மாதம் படியளந்துகொண்டு வந்தான். கிழட்டு. அயோக்கியப் பயல் (போகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/48&oldid=1029056" இலிருந்து மீள்விக்கப்பட்டது