பக்கம்:அந்தமான் கைதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்சி 6.

இடம்:திவான்பகதூர் மாளிகை

காலம் : மாலை

பாத்திரங்கள்:

திவான்பகதூர், முனியாண்டி, ராமசாமி சேர்வை.

பொன்: (நடமாடிக்கொண்டே பெருமூச்சு விடுகிறார்) என்ன மமதை என்ன திமிர் நிற்க நிழல் இல்லை! குடிக்கக் கூழில்லே! என் கெளரவமென்ன! அந்தஸ் தென்ன! கொஞ்சங்கூட கவனிக்காமல் பேசிவிட்டானே.......... மடையன். கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்வதுபோல் அவன் என்னைப் பகைத்துக்கொண்டான். இருக்கட்டும்; கூடிய சீக்கிரம் திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை யாரென்பதைத் தெரிந்துகொள்ளச் செய்றேன். (சோபாவில் சாய்கிறார். தரகன் முனியாண்டிப் பூசாரி "மகமாயி' என்றபடி வருகிறான். குழைந்து ஒரு பக்கம் ஒதுங்கி வணங்குகிறான்.)

பொன் : வாய்யா வா! நானும் உன்னைத்தான் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன். சரி, சேர்வையைப் பார்த்தாயா? அவன் என்ன சொன்னான்?

முனி : சொல்றதென்னங்க? இந்த முனியாண்டி போர காரியம் முடியாமே இருக்குமா என்ன? எல்லாம் ஒங்க தயவை எதிர்பார்த்துத் தானே ஆகணும்.

(சேர்வை வருகிறான்)

சேர்வை : நமஸ்காரங்க!

பொன் : வாய்யா வா! உன் பெயர்தான் ராமசாமி சேர்வையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/49&oldid=1029118" இலிருந்து மீள்விக்கப்பட்டது