பக்கம்:அந்தமான் கைதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பொன் : சேர்வே! அதிலே விஷயமிருக்கு. முனியாண்டி சொல்கிறபடி செய்

சேர்வை : ஆகட்டுங்க, எப்படியும் உங்க தயவு இருந்தா சரி.

பொன் : அப்படியானால் இன்றைக்கே வக்கீலைக் கலந்து. ஆக வேண்டியதை........

சேர்வை : ஆகட்டுமுங்க; அப்படியே செய்திடுறேன். எஜமானே சொல்லும்போது...... அப்போ நான் வரட்டுங்களா?

பொன் : சரி, சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்.

சேர்வை : ஆஹா அதான் சரின்னு சொல்லிட்டேனே! அப்பறம்......

முனி : சரி அப்போ......... நானும்... உத்திரவு வாங்கிக்கிறேன்.

பொன்: உனக்கும் ஞாபகம் இருக்கட்டும்.

முனி : ஆகட்டுங்க ஏதாவது சில்லரை இருக்குதுங்களா?

பொன்: எல்லாம் பிறகு ஆகட்டும்.

முனி: மகமாயி!

(போகிறார்கள்)
காட்சி 7.

இடம் : வீதி

காலம் : மாலை.

பாத்திரங்கள்: சேர்வை, முனியாண்டி

சேர்வை: ஏங்க, இது என்னங்க. ஐயா சொல்றது. எனக்குக் கொஞ்சங்கூடப் புரியலியே. வியாச்சியம் போட்டா செலவு தொகை உள்படல்லே கொடுக்கும்படியா வரும்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/52&oldid=1073440" இலிருந்து மீள்விக்கப்பட்டது