பக்கம்:அந்தமான் கைதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்சி 9.

இடம்: திவான்பகதூர் மாளிகை

காலம் : மாலை


பாத்திரங்கள்: திவான்பகதூர், முனியாண்டி, பிச்சைக்காரப் பையன்.

[திவான்பகதூர் சோபாவில் சாய்ந்தபடி சுருட்டுப் பிடித்துக்கொண்டிருக்கிறார். முனியாண்டி வருகிறான்.]

முனி : மகமாயி......

பொன் : வாப்பா முனியாண்டி. என்ன, காரியமெல்லாம் எப்படி ஆயிற்று?

முனி : வீடு நாளைக்கு ஏலம். இன்னெமே எல்லாம் படிஞ்சுடுங்க.

பொன் : படிகிறதாவது...உம் எனப்பா அந்தப் பயலைத் தொலைப்பதற்கு ஏதாவது ஒரு வழியில்லையா?

முனி : இதுதான்ங்க பிரமாதம். (சுற்றிப் பார்த்துவிட்டு ரகசியமாக) நம்ம சக்கரைத் தேவனைப் புடிச்சா, நிமிஷத்திலே முடிச்சுடுறான்.

பொன் : (பயத்துடன்) என்ன, கொலையா? ஊஹும். அப்புறம் அதனால் நமக்கு ஏதாவது தொந்தரவு வந்துவிட்டால்...... சேச்சே அதெல்லாம் வேண்டாம். அவனைத் தந்திரமாகக் கொஞ்ச நாளைக்கு இந்த ஊரை விட்டுக் கிளப்பி விட்டுவிட்டால் நம் காரியத்தை முடித்துக்கொள்ளலாம். எப்படியுங் கயிற்றைக் கழுத்திலே போட்டுவிட்டால் அப்புறம் இந்தக் கழுதை வந்து என்ன செய்ய முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/56&oldid=1029595" இலிருந்து மீள்விக்கப்பட்டது