பக்கம்:அந்தமான் கைதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

 முனி: யோசனை என்னமோ ஒங்க யோசனைதான்; ஆனா அதை உருப்படியா முடிச்சிவச்சுது நான்; பாருங்க!

ஜம்பு : ஆமாமா! அது மறந்துடுவேனா என்ன?

முனி : அதானே கேட்டேன், அப்புறம் இந்த சாக்கே வச்சிக்கிட்டே கையெ விரிச்சிட்டா......

ஜம்பு : என்னையா! பெரிய சந்தேகப் பிராணியா இருக்கிறியே. பெண் கழுத்திலே தாலி ஏறிய உடனே ரூபாய் ஐநூறு கைமேலே வந்திடும்.

முனி : விஷயம் பெரிசு ஏதாவது கொஞ்சம் அட்வான்ஸு.

ஜம்பு : நீ தான் அப்பப்போ வாய்க்கரிசி வாங்கிக்கிட்டே இருக்கியேய்யா. சரி டயமாச்சு நாளைக்குப் பாரும்.

முனி : ஏதாவது சில்லரை இருந்தா......

ஜம்பு : சில்லரையா? இந்தாரும்.

(சில்லரை கொடுக்கிறான்)

முனி: (வாங்கிக்கொண்டு) மகமாயி....

(போகிறார்கள்)
காட்சி 12

இடம்: நடராஜன் வீடு

காலம்: காலை

பாத்திரங்கள்  : காமாட்சி, நடராசன், லீலா.

[நடராசன் ரெங்கோன் புறப்படத் தயார் செய்துகொண்டிருக்கிறான், லீலா தமயனுக்கு வேண்டிய சாமான்களையும் துணி மணிகளையும் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள். காமாட்சி முந்தானையில் கண்ணைத் துடைத்துக் கொள்ளுகிறாள்.]

காமா : என்னமோப்பா நீ பொறந்த நேரம் இப்படி யெல்லாம் ஆகணூன்னு இருந்திருக்கு. (அழுகிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/62&oldid=1073445" இலிருந்து மீள்விக்கப்பட்டது