பக்கம்:அந்தமான் கைதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

 நட : இதெல்லாம் மனித வாழ்க்கையிலே சகஜம் தானே? ஏம்மா புறப்படும்போது இப்படி அழுகிறாய்? லீலா மணி ஏழுக்குமேல் ஆகிவிட்டது. எட்டு மணிக்கு ட்ரையின் டயமாச்சு சீக்கிரம் ஆகட்டும்.

லீலா : ஏன் அண்ணா ரெங்கோனுக்குக் கணக்கு வேலைக்குப்போனால் மூன்று வருஷத்துக்குக் குறைந்து வர முடியாது என்று சொல்லுகிறார்களே......

நட : யார் அப்படிச் சொன்னது? உன்னை விட்டு விட்டு நான் அங்கே நீண்ட நாள் தங்குவேனா? கண்டிப்பாய் ஒரு வருஷத்திற்குள் திரும்பிவிடுவேன். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே லீலா.

லீலா : நான் எப்படி அண்ணா உங்களை விட்டுப் பிரிந்து ஒரு வருஷம்வரை தனியாய் இருக்கமுடியும்? நானும் எவ்வளவோ மனதைச் சமாதான்ம் செய்துதான் பார்க்கிறேன்; முடியவில்லையே? (ஆத்திரத்தோடு பெருமூச்சு விட்டு அழுகிறாள்)

நட : இதென்ன லீலா நீயும் அம்மாவைப்போல் அழ ஆரம்பித்துவிட்டாய்? நீ சின்னப்பிள்ளையா என்ன? அட பைத்தியமே! படித்த பெண்ணாச்சே உனக்குக் கூடவா நான் தைரியம் சொல்லவேண்டும் நீயல்லவா அம்மாளுக்குத் தைரியம் சொல்லி எல்லாவற்றையுங் கவனித்துக் கொள்ள வேண்டும். என்ன பிரமாதம்! ஒரு வருஷந்தானே! எனக்குக்கூட உன்னே விட்டுப் போக வருத்தமாய்த்தான் இருக்கிறது. வீணாகக் கவலைப்பட்டு என்ன பிரயோசனம்?

காமா : என்னைப் பத்தி ஒன்னுமில்லே, லீலாவுக்கு ஒரு கலியாணத்தே பண்ணிப்புட்டுப்போனா.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/63&oldid=1030370" இலிருந்து மீள்விக்கப்பட்டது