பக்கம்:அந்தமான் கைதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


நட: ஆரம்பித்துவிட்டாயா அம்மா மறுபடியும். உன் குழந்தைக்கு வயது இன்னும் 14 கூடப் பூர்த்தியாக வில்லை. அதற்குள் என்ன கல்யாணம் வேண்டியதிருக்கிறது? மேல் நாடுகளிலெல்லாம் பெண்களுக்கு எத்தனை வயதுக்குமேல் கலியாணம் செய்வார்கள் என்று தெரியுமா?

காமா : ஏண்டாப்பா அவுங்களுக்கும் நமக்கும் ஈடுகாட்ட முடியுமா? அவுங்க நெனைச்சா கல்யாணம் பண்ணிக் கிருவாங்க, நெனைச்சா ரத்து பண்ணிக்கிருவாங்க; ஒருத்தியே பல புருஷனைக்கூட கட்டிக்கிருவா என்றெல்லாம் கேவலமா நீயே அவங்களெப்பத்தி எத்தினி தரஞ் சொல்லியிருக்கே நம்ம நாட்டுக்கு அதெல்லாம் ஒத்துவருமா? ஒரு வயசுப் பொண்ணெ வச்சுக்கிட்டு நான் ஒண்டியா எப்படித்தான் காலந்தள்ளப் போறேனோ? ஒலைவாயை மூடினாலும் ஊருவாயெ மூட முடியாதுன்னு சொல்லுவாங்களே......

நட : போதும் போதும்; அடாடா எப்பொழுதும் உன்னுடன் இதுதான் தொல்லை. எல்லாம் நான் வந்ததும் முடித்துவிடலாம் என்று சொன்னால் நீ வெள்ளைக்கார பெண்களை விமர்சனம் பண்ண ஆரம்பித்துவிட்டாயே! ஏன் அவர்களும் நம் நாட்டுப் பெண்களைப்போல் 10 வயதுக்குள்ளேயே கல்யாணம் செய்துகொண்டு, 13-லிருந்து 20 வயதுக்குள்ளே ஏழெட்டுப் பிள்ளைக்குத் தாயாகித் தொண்டு கிழவியைப்போல் தள்ளாட வேண்டுமென்கிறாயா என்ன? ......போம்மா! லீலா கல்யாணத்துக்கு இப்பொழுது ஒன்றும் அவசரம் இல்லை. எல்லாம் நான் வந்த பிறகு நல்ல இடமாகப் பார்த்துச் செய்துகொள்ளலாம். நீ அதை நான் இங்கு இருக்கும்பொழுது பேசுவது போல் சிடுக்கு வெடுக்கென்று ஒன்றும் சொல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/64&oldid=1030379" இலிருந்து மீள்விக்கப்பட்டது