பக்கம்:அந்தமான் கைதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்; என்ன? நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? லீலா! நீயும் அம்மாளை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள், அடிக்கடி தபால் எழுது......

ஜட்காவாலா : அரே! என்னாங்கோ சாமி! ஒங்களுக்காவ எவ்வளவு நாயி சாமி காத்துக்கிட்டு இருக்கிறது? அங்கே எங்க நின்னாலும் கோரட்டுக்கும் டேசனுக்குமா மூணு நாலு நடை அடிச்சிருப்பேனே சாமி.

நட : சாயபு இதோ ஆய்விட்டது; போகலாம். கொஞ்சம் பொறு, இதோ இந்தப் பெட்டி படுக்கைகளை வண்டியில் எடுத்துவை. (எடுத்துவைக்கிறான்) சரி டயமும் அதிகமாகிவிட்டது. ஏம்மா! நான் வரட்டுமா? லீலா! போய்விட்டு வரட்டுமா? நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். கவலைப்படவேண்டாம். நான் போனவுடன் தபால் எழுதுகிறேன். போய் வருகிறேன்" (காமாட்சியை வணங்குகிறான். லீலா நடராஜனை வணங்குகிறாள்.)

(நடராஜன் போகிறான்)


காட்சி 13.

இடம்: திவான்பகதூர் மாளிகை

காலம்: காலை


பாத்திரங்கள்:

திவான்பகதூர், முனியாண்டி, காமாட்சி.

[முனியாண்டியும் திவான்பகதூரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.]

முனி : என்ன வெறப்புங்க அந்தப் பையனுக்கு! ஒங்க பேரைச் சொன்னா நல்லபாம்பு மாதிரியில்லே சீறுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/65&oldid=1073446" இலிருந்து மீள்விக்கப்பட்டது