பக்கம்:அந்தமான் கைதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


முனி : சிறுசு தானுங்களே இன்னமே நீங்கள்தான் எல்லாம் சரிப்படுத்திக் கொண்டாரணும்.....அதோ அந்த அம்மாகூட வந்துட்டாங்களே!

(காமாட்சி வருகிறாள்.)

பொன்: வாவா! காமாட்சி வாம்மா! இப்படி உட்கார். அடாடா! இவ்வளவு தூரம் நடந்தா வந்தே? நீ வருவாயென்று இப்பொழுதுதான் முனியாண்டி சொன்னான், என் காரையே அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தேன்; அதற்குள்......

காமா : பரவால்லேண்ணா. இந்தப் பாழாப்போன கட்டைக்கு காரு வேறையா வேணும் காரு!

பொன் : ஏன் காமாட்சி! நீ என்ன அப்படிச் சொல்லுகிறாய்? என் மூச்சு உள்ளவரை உனக்கென்ன குறை? உன் குணம் எனக்குத் தெரியும். உன் மகன் மட்டும் ஒழுங்காய் இருந்திருந்தால் உங்களை இப்படிக் கஷ்டப் பட விட்டிருப்பேனா?

காமா : ஆமாம். யார் இருந்து என்ன? என்னமோ பாடி பரதேசியா யிருந்தாலும் முனியாண்டி சமயத்திலே வந்து உதவினான். அவனாவது இந்தச் சமயத்திலே உதவாமல் இருந்திருந்தால் குடியிருக்கிற குச்சையும் இழந்துவிட்டு என் பிள்ளைகுட்டிகளோட நான் சந்தியிலே நிற்கவேண்டியதுதான்.

(துணியை முகத்தில் வைத்து அழுகிறாள்.)

பொன் : ஓகோ! நீ அப்படியா நினைத்துக் கொண்டிருக்கிறாய்! இந்தத் திவான்பகதூர் பொன்னம்பலம்பிள்ளை மனது வைக்காமல் இருந்திருந்தால், முனியாண்டியும் உதவியிருப்பான்! சேர்வையும் சும்மா விட்டிருப்பான்! செட்டியும் இந்தக் காலிக் கழுதையைக் கூட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/67&oldid=1030407" இலிருந்து மீள்விக்கப்பட்டது