பக்கம்:அந்தமான் கைதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கொண்டு போயிருப்பான்! என்னமோ அந்தப் பாவிப் பயலுக்காகப் பார்த்தால் அநியாயமாக நம் தங்கை குடும்பம் கெட்டுப்போகுமென்று நினைத்துத்தான் மறைவாயிருந்து இவ்வளவு ஏற்பாடும் செய்தேன். உங்களுக்கு ஏது அந்த நன்றி?

காமா : உண்மையாகவா? இப்படீன்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியாதே! ஏனப்பா முனியாண்டி! நீ கூட இதுவரைக்கும் இப்படீன்னு ஒரு வார்த்தை, சொல்லலையே.

முனி : எஜமான்தான் இந்தக் காரியமே ஒருவருக்கும் தெரியக்கூடாதுன்று சொன்னங்க! அதனாலேதான் நானும் சொல்லலே.

காமா : அப்படியேதான் இருக்கட்டுமே; கூடப் பொறந்தவளுக்கு நீங்க செய்யாமே வேறே யாருதான் உதவி செய்யப் போறா?

பொன் : ஆமாம். செய்து செய்து என்ன பலன்? தூற்றலும் ஏச்சும் அவமதிப்பும்தான். என் குடும்பமும் நன்யிறாருக்கவேண்டுமெ என்ற எண்ணம் இருந்து, நாம் பிறந்த குடும்பம் இந்தத் தலைமுறையோடு பூண்டற்றுப் போய்விடுமே என்ற கவலையும் இருந்தால் இத்தனை நாள் கழித்து வலிய வந்த என்னை அவன் அப்படி அவமதித்து அனுப்பியதைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாயா? எனக்கென்ன உலகத்திலேயே வேறு பெண் கிடைக்காதென்றா உன் பெண்ணைக் கேட்க வந்தேன்?

காமா : என்னண்ணா இப்படிச் சொல்றீங்க? நானா வேண்டாமுன்னு சொன்னேன். ஒங்களுக்கே என் பெண்ணைக் கட்டி வைக்கணும். அதுக்காவது ஒரு குழந்தை குட்டி பிறந்து நம்ம பொறந்த எடத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/68&oldid=1030408" இலிருந்து மீள்விக்கப்பட்டது