பக்கம்:அந்தமான் கைதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

வெற்றிலைத் தட்டைக் கொண்டுவரச்சொல். (அனைவரும் சாப்பிடுகிறார்கள்) சரி இதோ பார் காமு!" இனிமேல் நாளைக் கடத்தக்கூடாது. வீட்டில் பெண் பிள்ளை என்று ஒருத்தி இல்லை யென்றால் எவ்வளவு கஷ்டம் என்பது உனக்குத் தெரியாதா என்ன? நான் ஒருவன் எவ்வளவு காரியங்களைத்தான் கவனிக்க முடியும்? (வேலைக்காரனைப் பார்த்து) அடே முட்டாள் வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டுவந்து வையடா! (வெற்றிலைத் தட்டை வைக்கிறான்) ஊம், காமு! வெற்றிலை போட்டுக்கொள்.

(தட்டைக் காமாட்சியிடம் எடுத்துக் கொடுக்கிறார்) இந்த மாதம் 22-ந் தேதி ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கிறாதாம். அந்த முகூர்த்தத்திலேயே கூட வைத்து விடலாம். என்ன முனியாண்டி?

முனி : ஆமாமா, சீக்கிரமா முடிகிறதுதான் தேவலை. எத்தனை ஆள் மாகாணங்கள் இருந்தாலும் வீட்டுக்குன்னு ஒரு சீதேவி இல்லேன்னா அது என்னக் குடித்தனங்க?

காமா : 22-ந் தேதின்னா, ஒரு வாரங்கூட இல்லையே! அவ்வளவு அவசரமா செய்யாட்டி என்னண்ணா? கொஞ்ச...

பொன் : ப்பூ...ஒரு வாரத்திலே எட்டுக் கல்யாணம் செய்யலாம். இப்ப எந்த சாமான் இல்லையே என்று கவலைப் படப்போகிறோம்? இதோ பார் (பீரோவைத் திறந்து ஒரு பெட்டியை யெடுத்து நகைகளை அள்ளிப்போட்டு) இந்தா இவைகளை யெல்லாம் கொண்டுபோய் லீலாவுக்குப் போடு. இனிமேல் அவள் திவான் பகதூர் மனைவி (ஒரு கத்தை நோட்டை எடுத்து வீசி) இதோ இந்தப் பணத்தை வைத்துக்கொள். அவளுக்கு வேண்டிய துணிமணி எல்லாம் வாங்கிக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/70&oldid=1069534" இலிருந்து மீள்விக்கப்பட்டது