பக்கம்:அந்தமான் கைதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கிறேன் பார் என்று சபதம் செய்துவிட்டு (சிரித்துக் கொண்டே) டிரைவர் காரையெடு என்றார்............ அந்த டிரைவர் வந்து, எஜமான்! நாலு ஆள் வேணும் கொறைச்சி தள்ளனும், என்றான்.

(சிரிக்கிறாள்)

பாலு : (சிரித்து) ஆகா, அந்த ரசமான காட்சியை நான் பார்க்காமல் போய்விட்டேனே! திவான் பகதூர் உங்களுக்குத் தீங்கு செய்வாரென்றே நினைக்கிறேன்.

லீலா : சேர்வை, பிராது போடுவதாக நோட்டீஸ் அனுப்பியதற்குக் கூட திவான்பகதூர்தான் காரணமாயிருக்க வேண்டுமென்று அண்ணாவுக்கு சந்தேகம்.

பாலு : அப்படியானால், எல்லாமே திவான் பகதூரின் தூண்டுதலில்தான் நடந்திருக்கும் போல் தெரிகிறது. எல்லாம் தெரிந்திருந்தும் இந்தச் சமயத்தில் ஏன் உன் அண்ணா ரெங்கோன் போகச் சம்மதித்தார்.

லீலா : வேறென்ன செய்வது? இந்தச் சமயத்தில் அதையும் விட்டுவிட்டால் குடியிருக்கும் வீடும் போய் விடும் மேலும்......... அம்மா......

பாலு : ஊம், அம்மாதான் இருக்கிறார்களே அம்மா உன் அம்மாவை நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும். நடந்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்தால் உன் அம்மாவே உன்னைத் திவான் பகதூருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கத் தயார் போலிருக்கிறது.

லீலா : யார் எதைச் செய்தாலும் சரி. இந்த உடலில் உணர்ச்சியோ, உயிரோ இருக்கும் வரை அது நடைபெறாது. ஆனால் நாம் எதற்கும் கொஞ்சம் ஜாக்ரதை யாகத்தான் இருக்கவேண்டும்.

பாலு : ஆமாமாம்; அவர் திவான்பகதூர்; பண பலம் அதிகமாக உள்ள அவர் நினைத்தால் எதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/75&oldid=1069673" இலிருந்து மீள்விக்கப்பட்டது