பக்கம்:அந்தமான் கைதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

செய்யலாம். அவர் விஷயத்தில் ஜாக்ரதைக் குறைவாய் இருக்கலாமா?

லீலா : அவர் பணமும், பட்டமும், பதவியும் நம்மை என்ன செய்துவிட முடியும்? நாம் மட்டும் ஒரே உறுதியாக இருந்தால் நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது. சரி, நாழியாகிவிட்டது; இந்நேரம் அம்மா வந்திருந்தாலும் வந்திருப்பார்கள். நீங்கள் நாளை மாலை வருகிறீர்களா!

பாலு : ஆமாம், இப்போது உன் தாயார் எங்கே போயிருக்கிறார்கள்?

லீலா : மாமா வீட்டுக்குத்தான். அதுதான் முன்பே சொன்னேனே!

பாலு : ஆமாம் மறந்து விட்டேன்...... நாளை நான் ஒரு முக்கியமான வேலையாக வெளியூர் போகிறேன். வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அநேகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திக்கிறேன்.

லீலா : ஞாயிற்றுக்கிழமையா? வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு அம்மாடி! நான்கு நாட்களா ஆகும்? அது வரை நான் எப்படி உங்களைப் பார்க்காமல் இருக்க முடியும்? அப்படி என்ன முக்கியமான வேலை அது?

பாலு : கால் பந்து விளையாட்டுப் போட்டிக்காக எங்கள் காலேஜ் மாணவர் குரூப் ஒன்று வெளியூர் புறப்படுகிறது! அத்துடன் நானும் போக வேண்டும். கண்டிப்பாய் எப்படியும் ஞாயிற்றுக்கிழமை மாலை உன்னை இதே இடத்தில் சந்திக்கிறேன். நான் வரட்டுமா?

லீலா : ஞாயிற்றுக்கிழமை மாலை மறந்துவிடமாட்டீர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/76&oldid=1069674" இலிருந்து மீள்விக்கப்பட்டது