பக்கம்:அந்தமான் கைதி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

 காமா : ஏண்டி ஒன்னே நான் வர்ணிக்காமே பின்னே யாரு வர்ணிப்பா? இன்னமே ஒனக்கு என்ன குறைச்சல்? எத்தனையோ லக்ஷ ரூபாய்க்கு எஜமானி ஆகப்போறே. அப்புறம் அம்மாளைக்கூடக் கவனிக்கிறயோ என்னமோ?

லீலா : என்னம்மா சும்மா உளருகிறாய்!

காமா : நானா ஒளர்ரேன், அப்படித்தான் இருக்கும். இப்பவே இப்படி இருந்தா அப்புறம் கேக்கவே வாண்டாம், பெத்தவளாச்சேன்னுகூடத் திரும்பிப் பார்க்கமாட்டே.

லீலா : (கோபத்தோடும் வெறுப்போடும்) என்னம்மா இது போட்டுக்குப் புரியாமல் பேசிக்கொண்டே இருந்தால் எனக்குக் கோபம் வரும்.

காமா : புரியுமா, புரியாதுதான். கோபங்கூட வரும்தான். ஏன்னா. நீ திவான்பகதூர் பெண்டாட்டியா இல்லையா?

லீலா : என்ன! திவான்பகதூர் பெண்டாட்டியா? யார் நானா?

காமா : ஆமாண்டியம்மா, ஆமா! நீ தான் இந்த மாதம் 22 உனக்கும் உன் மாமாவுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருக்கு இந்தத் துணிமணி, நகை, நட்டெல்லாம் ஒனக்காகத்தான் அவர் வாங்கிக் குடுத்திருக்கார்.

லீலா : போம்மா. இதெல்லாம் என்ன விளையாட்டு!

காமா : நெசந்தாண்டின்னா! வெளையாட்டாவது வெனையாவது. இன்ன மட்டும் பேசிக்கிட்டு இருந்துட்டு, அய்யரைக் கூட்டிக்கிட்டு வந்து முகூர்த்த நாளெல்லாம் பார்த்து முடிவு பண்ணிக்கிட்டு வர்ரேங்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/80&oldid=1069709" இலிருந்து மீள்விக்கப்பட்டது