பக்கம்:அந்தமான் கைதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காட்சி 18.

இடம் : தோட்டம்

காலம் : இரவு

பாத்திரங்கள் : பாலு, லீலா.

[பாலு பரபரப்புடன் சுற்றிப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான்.]

பாலு : இதென்ன நாடகம்? எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே! இவன் சொன்னதெல்லாம் உண்மைதானா? அல்லது என் மனப்பிரேமையா? பத்திரிகை அடித்தாகிவிட்டது. நாளைக்குக் கல்யாணம், இவ்வளவும் லீலாவின் சம்மதமில்லாமலா நடந்திருக்கும்? (சற்று யோசித்து) ஏன் இருக்காது? இருக்கும்! இருக்கும்! பெண்களின் குணமே மதில் மேல் பூனை தானே? அப்படி அவள் சம்மதமில்லாமல் இந்தக் கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாயிருந்தால் இன்று மாலை இங்கு வந்து அவசியம் சந்திப்பதாகச் சொல்லிப்போன அவள், ஏன் இதுவரை என்னைச் சந்திக்காமல் இருக்க வேண்டும்? அடி சண்டாளி! துரோகி என்னென்ன காதல் கதைகளெல்லாம் பேசி என்னை ஏமாற்றி வந்தாய்! "என் உடலிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டாலொழிய என்னை உங்களிடத்திலிருந்து யாராலும் பிரிக்க முடியாது' என்றுகூடச் சொன்னயே, அதெல்லாம் என்னை மயக்கத்தானே? (நீண்ட பெரு மூச்சுவிட்டு எழுந்து நாற்புறமும் பார்த்து) ஒருக்கால் நெடு நாட்களாகவே எங்கள் நட்பில் பொறாமை கொண்ட அயோக்யனான ஜம்புவின் கபட நாடகமாய் இருக்குமோ? இருக்கலாம். பல நாள் என்னுடன் சேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/85&oldid=1069794" இலிருந்து மீள்விக்கப்பட்டது