பக்கம்:அந்தமான் கைதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

பழகிய பரிசுத்த உள்ளமுடைய லீலாவா இப்படிச் செய்வாள்? ஒருக்காலும் அப்படியிருக்க முடியாது. இதில் ஏதோ சூது நடந்திருக்கத்தான் வேண்டும். (மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து அமருகிறான்; சுற்றிலுங் கவனித்துக் கடியாரத்தைப் பார்த்து) மணியும் ஒன்பதுக்குமேல் ஆகி விட்டதே! இனிமேலா அவள் வரப்போகிறாள்? இத்தனை நாளாக, அதிலும் இந்த ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட அவள் என்னைச் சந்திக்காமலும் இந்தக் காரியத்தைத் தெரியப்படுத்தாமலும் இருப்பதிலிருந்தே அவள் என்னைக் கண்டிப்பாய் நிராகரித்து விட்டாள் என்பது தெரிகிறதல்லவா? ஆம் அவள் என்னே வஞ்சித்து விட்டாள். சந்தேகமே இல்லை. இருக்கட்டும் எங்கள் வாழ்க்கையில் முடிவு என்ன என்பதைத் தீர்மானிக்க இடையில் இருப்பது, ஒரே ஒரு இரவுதானே? அதையும் பார்த்துவிடுகிறேன்.

(சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி கடிதத்தை எழுதிக் கேணி உருளை உத்திரச் சாரளத்தில் வைத்துவிட்டுப் போகிறான்.)

(லீலா வருகிறாள்.)

லீலா : (சற்று நேரத்தில் பதைபதைப்போடு திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பயத்துடன் பாலு-பாலு என்று அழைத்துக்கொண்டே வந்து) எங்கே? காணவில்லையே! ஒருக்கால் வந்து பார்த்து விட்டுப் போயிருப்பாரோ? ஆமாம் அப்படித்தான் இருக்கும் எதற்கும் வழக்கமாய்க் கடிதம் எழுதிவைக்கும் இடத்தைப் பார்ப்போம். (பாலு வைத்துப்போன கடிதத்தை எடுத்து நடுக்கத்துடன் படிக்கிறாள்.)

உண்மையை உணர்ந்தேன். உன் இஷ்டப் படி செய் எல்லாம் பணத்தில்தான் இருக்கிறது. என்பதை இப்போது உன்னால் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/86&oldid=1069844" இலிருந்து மீள்விக்கப்பட்டது