பக்கம்:அந்தமான் கைதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

கம் போன்ற கம்பீரமான குரல் ஒன்று கேட்கிறது. திகைத்து நிற்கிறாள். பின்வரும் பாடல் அவள் சோக வேகத்தையும் தடுத்து நிறுத்துகிறது.)

(தோட்டத்திற்கு வெளியே சாது ஒருவர் பாடிக் கொண்டு போகிறார்)
(சாதுவின் பாட்டு)

(கஜல்)

அகிலங்கள் அனைத்தும் அதனுள் ஆழ்ந்திடும் பொருள் அனைத்தும் ஆக்கவும் அழிக்கவும் வல்லான் நம்மை ஆண்டவன் ஒருவன் அல்லால்.

(பாட்டு)

(ஆடும் சிதம்பரமாம்)

மாண்டார் மீண்டதுண்டோ இந்த வையகத்தே உழல் பொய்யுடல் நீத்தே-(மா)

(கஜல்)

ஜீவன் ஒவ்வொன்றும் மகா தேவனின் அம்ஸமே ஆகும் ஜீவனுக் கின்னல் செய்வோர் யாவரும் பாவியே ஆகும்.

(பாட்டு)

(க்யாக்கருனாத்தே)

உடலழிந்தாலும் உயிர்தான் செய்வினைக்கு உரியதாகும் அதனால் மனமே மடமையினால் துன்பக் கடலிடை வீழ்ந்தே மடிந்துபோகும் முன்னமே உணர்மனமே-
(பாட்டைக் கேட்ட லீலா கிணற்றை விட்டுத் திரும்பி, தனக்குள்)

லீலா : ஆம், ஆம் நான் ஏன் இறக்கவேண்டும்? இது என்ன மதியீனம்! கோழைத்தனம் அல்லவா இது? மன உறுதியோடு நான் மறுத்தால்? ஆம்! என் உயிர் பாலுவை விட்டு நான் பிரியேன். பார்ப்போம் திவான்பகதூரின் திருமணத்தை.

(போகிறாள்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/88&oldid=1072290" இலிருந்து மீள்விக்கப்பட்டது