பக்கம்:அந்தமான் கைதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

 முனி : அடடே! அது இப்பக் கிடைக்கிறது கூடக் கஷ்டமாச்சே!......... அந்த ஷாப்புக்கடைகளிலே விசாரிச்சுப்பாரு, கிடைக்காட்டி இருக்கவே இருக்கு வண்டி மை, நாம் பாத்துக்கிறேன்; நீ சீக்கிரமா வந்திரு.

வேலையாள் : ஆவட்டும்; நீங்க போங்க.

(போகிறார்கள்)



காட்சி 20


இடம்: திவான்பகதூர் மாளிகை

காலம் : காலை

பாத்திரங்கள் : திவான்பகதூர், முனியாண்டி, வேலையாள். (பொன்னம்பலம் பிள்ளை உடை உடுத்திச் சிங்காரித்துக் கொண்டிருக்கிறார்; ஏவலாளர்கள் அணிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முனியாண்டி அங்கு வருகிறான்.)

முனி : மகமாயி!...

பொன் : என்ன முனியாண்டி! எல்லா ஏற்பாடுகளும் ஆகி விட்டதா? இதோ பார்! மாப்பிள்ளைக் கோலத்தில் நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. நீ தான் கவனித்துக் கொள்ளவேண்டும். ஐயர் வந்துவிட்டாரா? ஏன் அதற்குள் மேளத்தை நிறுத்திவிட்டான்? வாசித்துக் களைத்துவிட்டானோ? வாசித்துச் சொல்லப்பா.

முனி : (உள்பக்கம் பார்த்து அதிகாரமாக) அட எளவே... மேளத்தை வாசிங்கய்யா.

ஒரு ஆள் : மேளம் பொண்ணழைக்கப் போயிருக்குங்க.

பொன் : ஏப்பா முனியாண்டி! மேளம் ஒரு செட்டுக்குத்தான் சொன்னியா?

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/90&oldid=1073452" இலிருந்து மீள்விக்கப்பட்டது