பக்கம்:அந்தித் தாமரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iOf

சேகரன் வந்த ஒன்றிரண்டு மாதங்களுக்குள் மக்களிட மிருந்து நல்ல பெயர் சம்பாதித்துக் கொண்டதில் ஆதி மூலத்துக்கு உள்ளுரப் பொருமை. இதெல்லாம். ஏதோ கத்துக் குட்டிகள்; ஏதோ வாய்த்தான் பிழைத்தான் வியாபாரம், என்று எண்ணி உதட்டைப் பிதுக்கியவர் களுக்கெல்லாம், காட்டுவைத்தியர் தலைவராகவும் போவு கராகவும் விளங்கினர். கை மருந்தாக ஏதோ ஏட்டில் படித்தது துளியும், வாரிசு வாடை கொஞ்சமும், அனு மானம் கொஞ்சமுமாகத் தனி அரசு செலுத்தி வந்த வராயிற்றே ஆதிமூலம் புதுப் புள்ளியான சேகரன் என்றல் அவருக்கு ஏழாம் பொருத்தம். ஒரே துறையில் நிகழும் போட்டியின் விளைவு இது. இந்ாகிலேயிலே டாக்டர் சேகரனிடம் தம் மகளைக் காண்பித்து வைத் தியம் செய்வதென்றல்......? காட்டு வைத்தியர் ஆதி மூலத்துக்கு மனம் ஒப்பவில்லை.

‘கத்துக்குட்டி சேகரன் கிட்டே அதுவும் என் மகளுக்கு வைத்தியம் பார்க்கிறதாமே...ஹ-ம்; மாட் டேன். இந்தச் சேதியைக் கேட்டாக்க ஊரே சிரிக்குமே! ஆதிமூலத்தைப் பத்தி...... ஊஹூம்; மாட்டவே மாட் டேன்... ... காளி ஆத்தா, தோன் கண் திறந்து என் ஒரே குழந்தையைக் காப்பாத்தனும்; என் மானத்தையும் மதிப்பையும் காப்பாத்தவேணும்......”

ஆதிமூலத்தின் கண்களில் ஒரு சில பனித்துளிகள் அரும்பிச் சிதறலாயின. மெளனமாகப் பிரார்த்தித் தார்; மறுகணம், மறந்து போன ஏதோ ஒன்றைச் ‘சடக்கென்று நினைவு கூர்ந்தவராக உள்ளே ஒடிஞர். ஆசை மகளின் ஆற்றமையும் அங்கலாய்ப்பும் அவருள் வேதனைப் புயலைக் கிளறிவிடத் தவறவில்லை.

அந்தி-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/103&oldid=619526" இலிருந்து மீள்விக்கப்பட்டது