பக்கம்:அந்தித் தாமரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


ஆதிமூலம் உயிரே பறி போனவர் போலத் திகைத் தார்; திக்குமுக்காடினர்; திண்டாடிப் போனர்.

‘கண்ணகிச் சிலம்பைக் காணலேயே. ஐயையோ, காளி ஆத்தா இதுவும் உன் சோதனைதான? என்றும் இல்லாத திருநாளாகச் சிலம்பை எங்கேயும் காணுேமே: ‘கண்ணகிச் சிலம்பு வெள்ளியாலான காற்சிலம்பு போன்ற அணி, உள்ளே வெண்முத்துக்கள் குலுங்கும். பத்தினித் தெய்வம் கண்ணகியின் வழித் தோன்றல் களான ஆதிமூலத்தின் வம்சத்தினருக்கெல்லாம் கண் னகிச் சிலம்புதான் கண்கண்ட தெய்வம். சங்கடம் நேர்ந்த சமயமெல்லாம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் அது. சிலம்பை வணங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டால், அவர்கள் எண்ணியவை கை கூடும். இது அவர்களிடையே வளர்ந்து வந்த கம்பிக் கை. அந்த கம்பிக்கைதான் அவர்களுக்குச் சகலமும்! ஆதிமூலம் சிறு குழந்தை போல் விம்மினர், இருந்திருந்தாற்போல அவர் இதயத்தில் தீர்மானமான தொரு முடிவு பிறந்தது. ஆமாம்; இது எல்லாம் தெய்வ சோதனை கணக்கிலேதான் கடந்திருக்குது. இல்லாத போன கண்ணகிச் சிலம்பு காணுமப் போகுமா? என் மருந்துக்கு மசியாமல் முனு நாளா மகளுக்குக் காய்ச்சல் போட்டு ஆட்டி வைக்குமா? செம்பவளம், நீதானே எனக்கு உயிர் உலகமெல்லாம்? இதோ இப் போதே டாக்டர் சேகரனுக்கு ஆள் அனுப்பி வைக் கிறேன்......’ என்று அவர் தனக்குள் முனு முணுத்துக்

கொண்டார்.

ட?க்டர் சேகரன் அப்பொழுது வெளியே கிராம மொன்றுக்குப் புறப்படப் போனர். வேலைக்காரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/104&oldid=1273106" இலிருந்து மீள்விக்கப்பட்டது