பக்கம்:அந்தித் தாமரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


ரெண்டு துளுப்பொட்டணம் வாங்கிக் கொடுத்திருந்தா இம்மாங்காட்டி புள்ளே விளையாடிக் கிட்டில்லே இருக்கும்!” என்று தூபம் போட்டார்கள் பட்டிக காட்டுப் பாமரர்கள் சிலர்.

காட்டு வைத்தியர் ஆதிமூலம் அழைத்து வரப் பட்டார். டாக்டர் ஊசிக்கும் காட்டு மருந்துக்கும் ஒன்றுக்கொன்று ஒத்து வருமோ, என்னவோ?...ஏதோ பகவான் பேரிலே பாரத்தைப் போட்டுப் பார்க்கிறேன்’ என்று கிலியை ஊட்டிய பிறகு, தூள் ஒன்றைத் தேனில் குழைக்கலானர் வைத்தியர்.

சொல்லி வைத்த மாதிரி டாண்’ என்று அங்கு டாக்டர் சேகரன் தோன்றினர். ‘குழந்தைக்கு எந்த விதப் பயமும் இல்லை. ஊசி போட்டதின் மயக்கம்தான். வேறு மருந்து கொடுத்துக் குழப்பி விடாதீர்கள்!’ என ருா.

மறுகணம், ‘ஆளேப் பாருடா ஆளை, இன்னும் புத்தி வரல்லே. டாக்டராமே இவன்? ஊசி போட்டாரா மில்லே பச்சைப் பாலகனுக்கு ஊசி இந்த வியாபாரம் எல்லாம் இங்கே செல்லாது, தம்பி பட்டணத்திலேயே முட்டை கட்டி வச்சுக்கிடு...’ என்ற கூக்குரல்கள் எழுந்தன. ஆத்திரக் கூச்சலும் ஆரவாரமும் ஏசலும் உச்ச கிலே அடைந்தன. நல்ல வேளை, அந்தத் தருணம் அங்கு தோன்றினுள் அந்தப் பெண். அவ்வளவு பேரும் அடங்கி விட்டார்கள், அடே நம்ப வைத்தியர் ஆதி மூலம் ஐயா பொண்ணில்ல! என்ற மெளன. மொழிப் பரிமாறலுடன். -

டாக்டர் சேகரன் புழுவாய்த் துடித்தார். தமக்கு, விவரம் தெரியாதவர்கள் விளைவித்த அவமானத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/106&oldid=1273107" இலிருந்து மீள்விக்கப்பட்டது