பக்கம்:அந்தித் தாமரை.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

காக அவர் வருந்தவில்லை. ஆனல் அவர்களது அறியாமைக்கு வருந்தினர்; நிலைகுலைந்து போனர்.

“வருந்தாதீர்கள், டாக்டர் ஸார் இந்த கிராமத்துப் பட்டிக்காட்டு ஜனங்களே இப்படித்தான். தாங்களும் சுயமாகத் தெரிந்து கொள்ள மாட்டார்கள். பிறர் சொல்வதையும் கேட்டு கடக்க மாட்டார்கள். பாவம்: படிப்பு வாசனை துளியாகிலும் இருந்தால் இப்படியெல்லாம் நடப்பார்களா? என் பிறந்த மண் சார்பிட்டு நான் மன்னிப்புக் கோருகிறேன் தங்களிடம்?” என்றாள் அவள். டாக்டருக்கு நேர்ந்த இடுக்கண் குறித்து அவமானமும், கிராம மக்கள் மீது கொண்டுள்ள அவளது ஆத்திரமும் அவள் சொற்களில் இழையோடி நின்றன. அவள்தான் செம்பவளம் !

செம்பவளத்தின் முகத்தைச் சேகரனல் மறக்க முடியவில்லை. அதற்காகவேதானே என்னவோ அவளும் தன் நினைவு முகத்தை அடிக்கடி டாக்டர் முன் ஆஜர்ப் படுத்தி வந்தாள். செம்பவளம் எஸ். எஸ். எல். ஸி. படித்தவள்; இங்கிதம் பயின்றவள். டாக்டர் சேகரன் என்றால் அவளுக்கு உயிர்.

“டாக்டர் ஸார், ஒன்று சொல்லுகிறேன். இந்தப் பட்டிக்காட்டு மக்களிடையே உங்களது லட்சியம், சேவை எதுவும் பலன் கனியச் செய்யாது என்று நம்புகிறேன்...”

‘செம்பவளம், உன் கருத்து தவறு. கிணற்றில் தூறு படிந்திருந்தால் அதை அகற்றி, கீழே ஊறும் அமுத மயமான நீரைப் பயன் படுத்த வேண்டுமே அல்லாது, கிணற்றையே முடிவிடலாகுமா? கிராம மக்களது மாசு படிந்த உள்ளங்களைப் புடமிட்ட பொன்னக மாற்றுவது நம்மைப் போன்ற படித்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/107&oldid=1313342" இலிருந்து மீள்விக்கப்பட்டது