பக்கம்:அந்தித் தாமரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f06

களிடமே உள்ளது. இது நம் காந்தி மகாத்மாவின் கனவும் ஆகும். கான் சொல்கிறேன். என் லட்சியம், கனவு எல்லாம் விரைவிலேயே இம்மக்களிடையே பலன் காட்டும் என் பொறுமையும் பணிவும் கிச்சயம் இறுதியில் வெல்லும்!”

டாக்டர் சேகரன்-அழகி செம்பவளம் இவர் களிடையே நடந்த சர்ச்சைகளும் சம்பாஷணைகளும் இன்னும் எத்தனையோ......? ஆரம்பத்தில் துன்பமும் இடருமாக இருந்து, இதற்குள் அத்தனை கிராம மக்களின் இதய சாம்ராஜ்யத்தையும் டாக்டர் சேகரன் கைப்பற்றிக் கொண்டது கண்டு செம்பவளம்தான் எவ்வளவு அதிசயப்பட்டுப் போளுள் !

செம்பவளம் பேச்சு முச்சற்று, கினைவு புரண்டு கிடந்தாள். காட்டு வைத்தியர் ஆதிமூலம் டாக்டர் சேகரனேயே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனம் அடித்துக் கொண்டது. டாக்டரின் வாய் தனக்கு கல் வாக்குக் கொடுக்க வேண்டுமே யென்று புழுவாகத் துடித்துக் கொண்டிருந்தார். அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

டாக்டர் சேகரன் பரிசோதித்தார். சேகரனின் நெற்றிப் புருவங்கள் மேலேறித் தாழ்ந்தன. அவர் பெரு, முச்சு விட்டார். மிக்ஸர் கொடுத்தார்; இஞ்செக்ஷன் போட்டார். -

‘நல்ல வேளை, ஆரம்பத்திலேயே கவனித்து விட்டோம். இனி அபாயம் இல்லை. ஐயா, கவலையே வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே சேகரன் மருந்துப் பையைக் குடைந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து ஆதிமூலத்திடம் நீட்டி, ‘ஐயா, இது கண்ணகிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/108&oldid=619536" இலிருந்து மீள்விக்கப்பட்டது