பக்கம்:அந்தித் தாமரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 110

போகிறேன். பழம் நழுவிப் பாலில் விழுங் தாற் போலத்தான் அப்பாவுக்கு. மறந்து விட்டேன், பார்த்தீர்களா? எங்கள் கண்ணகிச் சிலம்பைத் தயவு செய்து ஒருவருக்கும் தெரி யாமல் ஆள் மூலம் என்னிடம் சேர்த்து விடுங் கள். அப்பாவுக்கு அந்தச் சிலம்பு இல்லை யென்றல் உடலில் உயிர் தரிக்காது ! 
                               தங்கள்,
                            செம்பவனம். "
  அந்தக் கடிதம் டாக்டர் முகத்தில் கிளப்பிவிட்ட அமுதச் சிரிப்புடன், அந்தியின் இன்பச் சிரிப்பும் கலந்து கொண்டது !
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/112&oldid=1672730" இலிருந்து மீள்விக்கப்பட்டது