இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செவ்வந்திப் பூச்சரம்
குறிப்புப் பேரேட்டுப்புத்தகம், சிட்டைப் புத்தகம் வந்தன; உடன் வந்தார் சோமையா. “என்ன வள்ளி யம்மை?’ என்று விசாரித்தார். நீறு கிறுக்கிய கோடு களில் நெற்றிச் சுருக்கங்கள் உருக் காட்டின.
‘செவ்வந்திப் பொண்ணுக்கு மேலுக்கு முடியலை யாம்; வினை தீர்த்தான் வந்து சொல்லிப்பிட்டுப் போனுக!”
‘பாவம்’
- ó”
சோமையா நெடு மூச்சை அகற்றினர்; கண்களில் ஈரம் அடையாளக் கோடு கிழித்தது. வள்ளியம்மை ராகுகாலம் கழிந்ததும் பத்து ருபாய்ப் பணம் எடுத்துத் தாரேன்; செவ்வந்தி கையிலே சேர்த்துப்பிடச் சொல்லி வினைதீர்த்தான் கிட்டே கொடுத்தனுப்பு!” என்றார் அவர். - -
பத்து ரூபாய்த்தாள் செவ்வந்தியின் வலது கை விரல்களுக்கு இடையில் கின்று தத்தளித்தது; சுடுநீர்த் திவலைகள் தெறித்து விழுந்தன. மேனியிலும் சூடு பறந்தது.