பக்கம்:அந்தித் தாமரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 성 ; :

జీ

வள்ளியம்மையைப் புரிந்துகொண்டார் சோமையா. ‘உம்’...அவ சொல்றது. வாஸ்தவர்தான்! நல்ல புள்ளி தான் எம் மச்சினன்.அமிர்தத்துக்குடி கம்ப பயலுக்கும் ஜோடிதான்’ o,

“ஆங்” என்று அலறிஞர் சோமையா. உதயத்தின் மலர்ச்சியில் அவருடைய சுருக்கம் விழுந்த முகம்” சாம்பிப்போயிருந்தது. முக்குக் கண்ணுடியைத் துடைத்துத் துடைத்துத் துடைத்து மாந்தளைக் கல்லாப் பெட்டியைத் துழாவினர்; அந்த வைர அட்டி கையைத் தவிர மற்ற ஆபரணங்கள் அனைத்தும் அப் படியே இருந்தன. லேவாதேவிக் கணக்கு வழக்குகள் ஈட்டுச் சீட்டுகள், கைச்சாற்றுப் புத்தகங்கள் இருந்தன. வைர அட்டிகை எங்கே ?

காலம் ஒடுகிறது; காலம் காட்டிவிட்ட நிகழ்ச்சி எதுவும் ஒடிவிடுவது இல்லை. மனம் மறப்பினும், மனச் சான்று எதையும் மறப்பது கிடையாது !

கடந்த கதை:

பர்மாவில் கலவரம் முளைத்தது. ஆனபடியால் சோமையா ஊருக்குப் புறப்பட்டார். ஏஜண்டாக அலுவல் பார்த்ததில் கிடைத்த கிகர லாபம் பணமாக அவருடன் இணைந்தது. இன்றையக் கட்டுப்பாடுகள் எதுவுமே அன்று பர்மாவில் உருவாகவில்லை. ஆகவே, தாராளமாகப் பணம் காசுடன் அவரால் புறப்பட முடிந்தது. வீரப்பன் ‘பக்கோவிலேயே தங்க வேண்டிய வரானர். தேக்குமரத் தோட்டத்தில் நடைபெற்று வந்த தொழிலை முடித்ததும்தான் புறப்பட முடிக மென்று செட்டியார் சொன்னர், எனவேதான், வீரப்பன் பயணப்படக் கூடவில்லை. உபரியில் செய்து வந்த கொடுக்கல் வாங்கலில் கிடைத்த லாபத்தில் தன் மகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/116&oldid=619553" இலிருந்து மீள்விக்கப்பட்டது