பக்கம்:அந்தித் தாமரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 Í

இலுப்பை எண்ணெய் தேங்கியிருந்த பாலைவனம் அகல் விளக்குத் தீ ஏங்தியிருந்தது. -

‘உங்க உடன்பிறந்தா வர ஆலன்னு சொல்லிப்பிடுச் சுங்களாங் காட்டியும்?’’

“ஆமா, அதோட புருசனுக்கு மேலுக்கு முடி ய2லயாம்!”

‘ம். ஆத்தா தேரோட்டத்துக்கு விருந்தாடி வாரது வளமை; அதுகூட இந்தக் கடுத்தம் தடம்மாறி யிருச்சுதே!’

ஆற்றமைப் பெருமூச்சு வெளிப்போர்தது. பனைமரத்துள்ளுேடு உராய்ந்தவாறு சாய்ந்திருந்த அஞ்சலேயின் வெளிறியிருந்த வதனத்தில் கவலையில் பிறந்த அச்சம் கோடு கிழித்தது. ஆத்தாடி என்று முக்கி முனகிக் கொண்டே மண்தரையில் அமரப் பிரயத்தனப்பட்டாள் அவள். ‘பையக் குந்து புள்ளே!’ மஞ்சள் குளித்த முகத்தில் காணம் அணைந்தது; உதட்டைக் கடித்துக்கொண்டாள் அவள்.

‘மூஞ்சியைக் களுவிக்கினு ஒடியாங்க, மச்சான். சுடுகஞ்சி ஊத்துறேன்!”

‘தொட்டுக்கிறதுக்கு என்ன வெஞ்சனம் இருக்கு? “கூனிப் பொடிக் கொளம்பு ஆக்கி வச்சிருக் கேனுங்க! வெள்ளப்பூண்டு ஒன்னேயும் போட்டி ருக்கேன். கல்லா மணக்குதாக்கும்! ஆமா!’

சுப்பனின் உதடுகளில் ஈரம் துளிர்த்தது. இமை விளிம்புகளில் இடையீடு இல்லை. . “என்ன மச்சான் ரோசிக்க ஆரம்பிச்சுப்பிட்டீங்க?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/123&oldid=619567" இலிருந்து மீள்விக்கப்பட்டது