பக்கம்:அந்தித் தாமரை.pdf/125

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

123

நமக்கு ஆபத்துச் சம்பத்துக்குத்தான் உதவி ஒத் தாசைக்கு ஜனங்க தெகையலே என்னமோ, ஆத்தா தான் கம்பளுக்குத் தொனே!"

“நம்ப ரெண்டு வழியிலேயும் பெத்தவங்க கண்ணே முடிக்கிட்டாங்க, வாய்ச்ச சொந்தக்காரங்களுக்கு நம்ப பெரிசாப் பட்டாத்தானே!...நீ சொல்ருப்பிலே, நமக்கு ஆத்தாதான் சகலமும். பதனமா எழும்பு, அஞ்சலே!”

மண்ணில் பதிந்து அழுந்திய பத்து விரல்களுக்கு உதவிய கடமை எதிர்த் தரப்புப் பத்து விரல்களையே சாரும் !

அப்போது, “மச்சான்!” என்ற புதிய அழைப்பொலி குறுவாயிலில் தங்கி, இருட் செறிவுடன் அல்லாடியது. “ஆத்தாடியோ!...எங்க வேலாயி!... ஒனக்கு ஆயுசு நூறு பொட்டுப் பொளுதுக்கு முன்னமேதான் ஒன்னைப் பத்தி அஞ்சலை கிட்டே வாயாடிக்கிட்டிருந்தேன்!... உள்ளே வா, மாமன் மவளே!’’

"த்தாளேதான் ஒன்னை இங்கனே கூட்டியாக்திருக்கோணும், வேலாயி’ என்று இன்பத்தோடு சொல்லி மகிழ்ச்சியடைந்தாள் அஞ்சலை.

உதயப்பூவிற்கு இளஞ்சிவப்பின் பொன் வண்ண மேனி உலகத் தொட்டிலாக உருக்கொண்டது; உருக் காட்டியது.

"நீ புளிக்குடிச்சு முடிஞ்சதுக்கு அப்பாலேதான் கான் ஊருக்குப் பயணப்படுவேன், அக்கா!"

கள்ளவிழிப் பார்வை மறைத்துக்கொண்டிருந்த கள்ளமிலாத் தன்மையில் மெய்ம்மறந்தாள் தாய்மைப் பதவி அடைந்திருந்தவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/125&oldid=1672733" இலிருந்து மீள்விக்கப்பட்டது