பக்கம்:அந்தித் தாமரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


“எங்க மச்சானுக்கு கீ ஆம்பிளேப் புள்ளையைக் கொடுக்கப் போறியா?. இல்லேங்காட்டி, பொண்ணைத் தரப் போ குறியா, அக்கா?

அஞ்சலைக்கு அயனை வெட்கம் பிறந்தது. பிறக்கப் போகும் குழந்தையைப்பற்றி அனுமானம் செய்து பார்க்கும் பக்குவம் அவளுக்குக் கிடையாது; என்றலும் உருப்பெற்றிருக்கும் குழவி உருக்காட்டவிருக்கின்ற கோலம் அவள் முகத்திரையில்; கோலங்கை காட்டிற்று.

‘அக்கா! எங்க மச்சானுக்கு ராஜாதான் வேணுமாம் சொன்னக!...அதாலே, நான் ஒரு ராணியைப் பெத்துக் கொடுத்துப்பிடறேன்!... விட்டுப் போன சொந்தம் அப் பத்தான் ஒட்டிக்கிட ஏலும்!”

“மெய்யான தாக்கல்தான் வேலாயி!’

அஞ்சலை அவசரம் அவசரமாக வேலாயியை கோக்கி விழித்தாள்.

வேலாயியின் கழுத்தில் மஞ்சள் கயறு எதுவும் காணப்படவில்லை :

கட்புலம் பதித்து, மண் குடம் ஏக்தி, மண் மிதித்து மண் விலக்கி வந்தாள் வேலாயி. இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றுமாகக் குடம் காணப்பட்டது. கழைக் கூத்தியின் லாகவம்’, தராசு முனை கிதானம், கண் கொத்திப் பாம்பின் அளுத்தப் பார்வை எல்லாந்தான் இருந்தன, அவளிடம். ஆனாலும், ஒரு சின்னக்கல் அவள் காலே-இடது காலை-இடறி விட்டது. தடுமாறிப் போனுள்; கல்லில் தலைக்குடம் உடைந்தது. அச்சமயம் பார்த்து நல்லவேளையாகத் தோன்றின்ை சுப்பன். வேலாயியின் இடுப்புக் குடத்தைப் பற்றிக்கொண்டான்; இடையில் இழையோடிய விரல்கள் கடுக்கம் காண் பித்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/126&oldid=1273115" இலிருந்து மீள்விக்கப்பட்டது