இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பன்னிரண்டு ஆண்டுகளாக அல்லும் பகலும் தன் னுள்ளே குமுறிக் கொந்தளித்துப் புரண்ட எரிமலையைக் கேவலம், இந்த நாலு வரிக் கடிதம் அனைத்துவிட முடியுமா?
* * *
“சூடா, கண்ணே சூடா” என்று வினாடிக்கு ஆயிரகத் தடவை அலட்டினாள் ருக்மிணி.
குழந்தையின் மேனியில் நெருப்பைக் கட்டி வைத் தாற் போல அப்படிக் கொதித்தது.
பெற்ற மனத்தில் தீ பற்றி எரிந்தது. - டாக்டர் வந்தார். நோய்க்குப் பெயர் சூட்டினர்-'டபிள் நிமோனியா', பணம் விழுங்கும் நோய். அத்தனை பணத்துக்கு எங்கே போவாள், பாவம்?
பரிசாக வந்த தங்கப் பாவைவிளக்கின் நினைவு வந்தது. அதை விற்றுப் பணமாக்கிக் கொள்ள மகள் யோசனை சொன்னாள். அப்போது தாய்க்கு மனமில்லை. இப்போது அதைத் தவிர வேறு உபாயம் இல்லை. ‘விசுக்' கென்று உள் அறைக்கு ஓடினாள். அவள் துடிப்பு நின்று விட்டது. பாவைவிளக்கு இருந்த இடத்தில் சூன்யம் கை கொட்டிச் சிரித்தது.
அவள் கண்கள் அழுதன.
டாக்டர் எழுதிக் கொடுத்திருந்த ஊசி மருந்தை வாங்கப் பணம் வேண்டுமே பணம் அடுத்த வீட்டுத் தாத்தா உருவில் வலிய வந்தது. "தங்கச்சி, இதோ நூறு ருபாய் இருக்குது; வைத்தியச் செலவுக்கு இருக் கட்டும்" என்றர். 'ஸ்டெதாஸ் கோப்' விஜயத்தின் எண்ணிக்கை நீண்டது; முடிந்தது.