பக்கம்:அந்தித் தாமரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


எழுந்தது. அடுத்த விநாடி மச்சான்!” என்று அரற்றி ள்ை. தன்னுடைய உயிரின் உயிராக இயங்கிய ஆசை மச்சானே நெஞ்சில் வரவழைத்தாள். ஆனல், எதிரில் நின்றவள் வேலாயி. கை விரல்கள் நெறிந்தன. நெற்றிப் பொட்டு விட்டுப் போனது! எனக்கும் அன்னக்கிளி கணக்கிலேதான் விதிச்சிருக்குமா?...வேலாயி காலடி யிலேதான் இவக கெடப்பாகளா?

கிமையில் கண்ணிர். நெஞ்சத்தில் ஊழிப்புயல். நாலு தவணை செங்கல் அடித்து வந்து, மொட்டை. வண்டியை அவிழ்த்துப் போட்டான்; மாடுகளுக்குத் தீவனம் வைத்தான். அயர்வுடன் நுழைந்தான்.

அஞ்சலேயின் கண்கள் கண்ணிரை உண்டன. இரவு. கோடையில் வேப்பங் காற்றுப் பட்டால் எவ்வளவு தூரம் இதமாகயிருக்கும். தெரியுமா ?

அஞ்சலே உள்ளே உறங்கினுள்; சுப்பனும் அங்கு, தான். வெளித் தாழ்வாரம் வேலாயியைக் காத்தது. எட்டடிக் குச்சு என்றாலும், எல்லே இல்லாமலா? நியதி எங்கே போய்விடுமாம்...? .

இருந்திருந்தாற்போல், அஞ்சலை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

வேலாயி!...வேலாயி!...’ சுப்பனேதான் முணமுணத்துக் கொண்டிருந்தான். “ஐயோ! மச்சான்!” - அஞ்சலே கதறினுள். சுப்பன் பதறித் துடித்து விழித்தர்ன். . . . வேலாயி, ஒடியா கான் போயி அம்படச்சியை இட்டாரேன்’ - * .

வேலாயியைக் காணுேம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/131&oldid=1273119" இலிருந்து மீள்விக்கப்பட்டது