பக்கம்:அந்தித் தாமரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13?

புலம்பினிக!...காங்கூட முளிச்சுக்கினேன்!...அ க் கா “ஐயோ, மச்சான்!” அப்படின்னு கதறிச்சு!...எனக்குத் திக்குத்திசை மட்டுப்படலே!...என் ஒருத்தியாலே அது உசிருக்குக்கூட குந்தகம் ஏற்பட்டிடுமோன்னு கடுங் கினேன்; காளி ஆத்தா காலடியிலே நெடுஞ்சாங் கிடையா வந்து விளுந்து, அக்காவைக் காப்பாத்தி, புள்ளையையும் கண்ணிலே காட்டனும்னு வேண்டிக் கிட்டேன். ராவு முச்சூடும் கான் செஞ்ச தவம் பலிச் சிடுச்சு!...”

வேலாயி சிரித்தாள்.

‘வேலாயி ஒனக்கு கல்ல மாப்பிள்ளையாப் பாத்து முடிச்சு வைக்கோனுமிங்கிற கவலை நீ வந்த நாள் தொட்டு என்ன அரிச்செடுத்துச்சுது. அந்த கெனைப்பிலே படுத்தவன், உம் பேரைச் சொல்லி உளறியிருக்கேன்போலே!...நீ அஞ்சலையைப் புரிஞ்சுக் கிட்ட அளவுக்குக்கூட என்னலே அவளைக் கண்டுக்கிட முடியலையே!...கான் உம்மேலே வச்சிருக்கிற துலக்க மான அன்பைப் பத்தியும் இனியாச்சும் அஞ்சலே கட் டாயம் விளங்கிக்கிடும்....காளி ஆத்தா நல்ல வேளையா நம்ப முனு பேரையும் யாதொரு விக்கினமும் வராமக் காப்பா த் திப் பி ட் டா!...இந்தப் பாளாப்போன மனசோட பேயாட்டத்தை கெனேச்சா, ஒரே தெகைப் பாத்தான் தோணுது; ம் எந்தப் பேயாட்டத்தையும் தீர்த்து வைக்கத்தான் ஆத்தா ஊர்க் கோடியிலே காவல் காத்துக்கினு இருக்காளே!...எல்லாம் தாயோட விளையாட்டு...கருணை!” -

. உணர்ச்சிகள் பேசின. . -

“எம்புட்டு மாப்பிள்ளையைப் பார்க்க வேணும். ஒடியாங்க மச்சான், போவலாம்!” ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/133&oldid=619588" இலிருந்து மீள்விக்கப்பட்டது