அத்தை மகள்
“லார், தபால்: திரும்பிப் பார்த்தேன். எதிரே தபால்காரன் கையில் கடிதத்தை ஏந்திய வண்ணம் வருவதைக் கண்டதும் குறிப்பறிந்த என் கைகள் கடிதத்தைப் பற்றின. பார்வை உறையின் மீது சென்றது. நான் அதிசயித்து விட்டேன். ஏர் மெயில் மூலம் பர்மாவிலிருந்து அக் கடிதம் வந்திருந்தது. என்னேயும் அறியாமல் ஏதோ ஒரு வித சக்தி உந்தித் தள்ள, கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். கண்கள் கலங்கிவிட்டன. -
ஆமாம்; லதா ரங்கூனிலிருந்து எழுதியிருக்கிறள். ஆஹா! பெண்மையின் பிரிவு எத்துணை தூரம் என் மீது பதிந்து, அவ்வளவு காலமாகத் தன்னுள் அடக்கி வைத்திருந்த அன்பு முழுவதையும் வெளிக்காட்டி இக் கடிதத்தை எழுதியிருக்கிருள். ஆனல்...! -
ஆமாம்; சுஜாதா தன் அன்பு வலையில் என்னைச் சிக்க வைத்து வேடிக்கை பார்த்து விளையாடும் அவள்
கதி-?
எவ்வளவு நாழிகை வாசல் காம்பவுண்டில்
சாய்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேனே தெரிய 2ல சித்தம் கலந்தது. திரும்பி என் அறைக்குள்