பக்கம்:அந்தித் தாமரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


அன்று ஆபீஸிலிருந்து வந்துகொண்டிருக் கையில் நாளே மாலே காணப் போகும் லதாவைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டு வந்தேன். வாசலில் வண்டி ஒன்று வந்து நின்றது. குமார் என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். சுஜாதா வருத்தம் தோய்ந்த முகத் துடன் நின்று கொண்டிருந்தாள். காரணத்தைக் கேட் டேன், பதட்டத்துடன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் விழிகளில் கண்ணிர் தேங்கியது. பேசாமல் என்னிடம் டைப்’ செய்திருந்த காகிதம் ஒன்றை நீட்டி ள்ை. படித்தேன்; தலே சுழன்றது, அவளை மாயவரத் திற்கு மாற்றி விட்டார்கள். விரைவில் சென்று சார்ஜ்’ ஒப்புக்கொள்ள வேண்டுமாம். சுவர்க்கத்துக்கு ஏறிய நூல் அருந்துவிட்டது.

‘குமார், என்னை மறந்துவிட மாட்டீர்களே” என்றாள் விம்மிய வண்ணம். கபடமற்ற அவளது உள்ளத்தினின்றும் கிளம்பிய இக்கேள்வி கல்லினும் கடிய என் மனத்தில் அம்பெனப் பாய்ந்தது. லதா போட்டிருக்கும் லெட்டர் பற்றி ஏதேனும் தெரிந்திருந் தால் இப்படி அவள் கேட்பாளா?

“ஏன் இவ்வித சந்தேகம் சுஜாதா ? முன்பின் அரியாதிருந்த நாம் ஒன்று கூடிைேம். பின் இப்படி எதிர்பாராமல் பிரிகிருேம். ஆனால், எப்படியும் பிரிந்த காம் சக்திப்போம், வருந்தாதே அம்மாவைக் கவன மாகப் பார்த்துக் கொள்.’ -

ഥേയേ ചേ8 முடியாமல் கண்ணிர் தடைபடுத்தியது. அவளுடைய விழிகள் வடித்த நீர்த்துளிகள் அவள் மேனியை நினைத்தன. கோலக் கரங்களைக் குவித்து ‘கமஸ்தே தெரிவித்தாள். மறுநிமிஷம் வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/139&oldid=1273122" இலிருந்து மீள்விக்கப்பட்டது