இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூடாவுக்கு நல்ல உயிர் மீண்டது. ருக்குவுக்கு நல்லமூச்சு மீண்டது. வாசலில் 'கெடிலாக்' வந்து நின்றது. ஜில்லா கலெக்டர் தண்டபாணியின் உருவம் தெரிந்தது. சூடாவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. அன்றைக்குப் பரிசு வாங்குகையில் ‘சல் யூட்' செய்தது போலவே இப்போதும் செய்து வணக்கம் தெரிவித்தாள். "அம்மா, கலெக்டர் ஸார் வந்திருக்காங்க; நம்ப வீடு தேடி வந்திருக்காங்க.” ருக்மிணி வந்தாள். தண்டபாணியைப் பார்வை யிட்டாள். கலெக்டரின் சிரம் தாழ்ந்தது. " அம்மா, என்னம்மா சும்மா நிக்கிறே? போய் காப்பி கொண்டாம்மா, கலெக்டர் ஐயாவுக்கு. சொல்ல மறந் துட்டேன். எனக்கு மேலுக்கு முடியாமலிருந் தன்னிக்கு மத்தியானம் இவங்க என்னை வழியிலே கண்டதும் காரை நிறுத்தச் சொல்லி, பழங்களெல்லாம் கொடுத்தாங்க... ஒரு நாளைக்கு நம்ப வீட்டுக்கு வர்ற தாகக்கூடச் சொன்னாங்க... இவங்க மாதிரியே எல்லாப் பெரிய மனிதர்களும், சொன்ன சொல்லைக் காப் பாற்றுவாங்களான்னு எனக்குத் தோணல்லை. அம்மா, காப்பி கொண்டா... போ..." காப்பி வந்தது. " உம் சாப்பிடுங்க, ஸார். நாங்க ஏழைங்க. இது தான் முடிஞ்சது. எனக்கு வேறே காய்ச்சல். என்னாலே அம்மாவுக்கு ரொம்ப சிரமம்...எங்க அப்பா இருந் திருந்தா இந்நேரம் நான்கூட உங்கமாதிரி ஒரு
காரிலே போவேனாக்கும்....”