139
கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே லெட்டர் ஒன்று வந்து விழுந்தது. லதாதான் எழுதியிருக்கிருள் என்பதை ஊகித்ததும் அவசரமாய்ப் பிரித்தேன்.
“அன்புள்ள அத்தான், தாங்கள் என்னிடமிருந்து இத்தகைய லிகிதத்தை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். - -
என் இதய பீடத்தில் வைத்துப் பூஜிக்கும் தங்களை வேறொரு ஜீவனும் அக்தரங்க பிரேமையுடன் அர்ச் சிக்கிற ரகசியத்தை இன்றுதான் நான் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியது. நான் தங்களுக்கு முறைப் பெண் என்று அவளுக்கு எவ்விதம் தெரியும்?
சுஜாதாவின் பழக்கம் ஏற்பட்ட கான்காம் காள் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பெட்டியைத் திறந்து காண்பித்தாள். அப்போது ரோஜா மலர்கள் புடைசூழ அவற்றின் பரிமள வாசனையிடையே திளைத்து வீற்றிருந்தீர்கள் தாங்கள். ஆமாம்; தங்கள் போட்டோவைத்தான் குறிப்பிடுகிறேன். என் உடல் வியர்க்க, கல்ல வேளையாக கிலேயைச் சமாளித்துக் கொண்டு, மெல்ல நகர்ந்து விட்டேன். -
எனினும் அவள் எவ்விதத்திலும் தங்களுக்கு ஏற்றவள். அவளிடம் பழகியது குறுகிய காலமெனினும் தங்களிடம் முழு நம்பிக்கையும் வைத்துள்ளாள் சுஜாதா. - . . . . “
சுஜாதாவைத் தாங்கள் உயிர்த்துணையாக ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதுதான் இந்த அப2லயின் ஒரே வேண்டுகோள். அதுவேதான் என் அத்யந்த ஆசை.
- இங்கனம்,
தங்களவளாயிருந்த, லதா.