பக்கம்:அந்தித் தாமரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


உள்ளம் உருகியது; உடல் உருகினேன். நரக வேதனை என்னுள் சுயாட்சி செலுத்த, கான் செயலிழக் தேன்; செய்வதறியாமல் சித்தம் குலைந்தேன்.

திடுமெனக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுஜாதா ஓடோடி வந்தாள்- என்ன ஆச்சர்யம்! கனவில் நிகழ்வது போலிருந்தது. என்னவோ ஏதோ என்று பதறிப்போனேன்.

“லதாவின் உடல்நிலை ரொம்பவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. இப்போதுதான் இங்கே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வக் திருக்கிறேன் புறப்படுங்கள்’ என்றாள். துயரம் ததும்ப, கடுங்கும் கைகளுடன் அவளிடம் லதாவின் அந்தக் கடிதத்தைக் கொடுத்தேன். சிறு குழந்தைபோல விசிக்கத் தொடங்கி விட்டாள் சுஜாதா.

உடனே புறப்பட்டு ஆஸ்பத்திரியை அடைந்தேன், சுஜாதாவுடன், லதா சுருண்டு கிடந்தாள். அக்காட்சி யைக் கண்டதும் எனக்கு இதயத்துடிப்பே நின்று விட்டது போலாயிற்று. லதாவைப் பற்றி அருகில் கின்ற கர்ஸிடம் கேட்டேன். அவள் உதட்டைப் பிதுக்கிள்ை. என்ன ஏமாற்றம்? அரவம் கேட்டு: மெதுவாக முடியிருந்த கண்களைத் திறந்தாள் லதா. இதழ்கள் அசைந்தன. ஆல்ை, வார்த்தை ஒன்றுகூட வெளிக் கிளம்பவில்லை. என்னேயும் சுஜாதாவையும் ஒரு முறை ஆர்வத்துடன் நோக்கி, சமீபமாக வரும்படி சமிக்ஞை காட்டினள். அவளுடைய கைகள்

அப்போது அவள் முகத்தில் ஒருவிதக் ல்போலத் தோன்றி மறைந்தது.

இமைகள் முடிவிட்டன.

வின்யாடிய நேரமாயிற்று அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/142&oldid=1273124" இலிருந்து மீள்விக்கப்பட்டது