பக்கம்:அந்தித் தாமரை.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தில்லைக்கண்!

பூவை நிகர்த்து, பூமணம் சொரியும் பூவைக்கு அவளென்ன குறைந்தவளா? ஏட்டிடை ஒட்டி, எழில் மிகப் பரப்பும் காவியப்பதுமை அல்லவா அவள்? இதழ் விலகி இதழ்க் கடைச் சிரிப்பினை விலக்கும் அந்தப் பாங்குக்கு ஈடேது, எடுப்பேது? பருவத்தின் துதிபாடிய மெருகுடன் வாய்த்தது அவளது போதை அழகு; போதையில் போதம் இருந்தது. அவள் பெண்தானோ? அன்றி, மோகினியோ?

‘ஏலே தில்லைக் கண்ணுப்பொண்ணு!.... இனி ஒரு வாட்டி அப் பொறப்புலே உன்னை இந்தக் கண்ணாலே ஏறெடுத்துப் பார்க்க ஏலுமாக்கும் என்னாலே?... ஊக்கூம்... எனக்குச் சம்சயந்தான்!... காளியாத்தா தேரோட்டம் பத்து இருவது வந்து பறிஞ்சிருச்சே?... ஒட்டி இருக்க வேணுமின்னு சொப்பனம் கட்டினோம். ஆனா, இப்படி நம்ம ரெண்டு பேரையும் வெட்டிப் பிரிச்சிருச்சே பாழத்த தலைவிதி!... ஊக்கும், விதி ஒண்னும் பிரிக்கலே!. நீதானாக்கும் என்னை விட்டுப்புட்டுப் பிரிஞ்சு போனே?...ம்...!’

விளையாட்டுக் காட்டிய கனவுகளோடு விளையாடி நின்ற முத்தரசனுக்கு, புகையிலைக் காம்பைக் கிள்ளும் நேரம், ஆத்திரம் மண்டி வந்தது. கனவு நிலையி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/143&oldid=1305833" இலிருந்து மீள்விக்கப்பட்டது