பக்கம்:அந்தித் தாமரை.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

 "அழாதே, சூடா. உனக்கு ஒரு நல்ல சேதி சொல் லப் போறேன்” என்றார் கலெக்டர் ஸார்.
 "எனக்கு கார் கீர் வாங்கித் தரப்போரீங்களா?”
 "உம்..."
 "கார் வேண்டாம்!”
 "வேறே?"
 "என் அப்பாவை என் கிட்டே கொண்டு வந்து சேர்த்திடுறீங்களா?...”
 "ஓ...”
 "எப்போ?”
 "இதோ, இப்பவே!"
‌ "மெய்யாவா?"
‌‌ “ஆமா!"
 “எங்கே? ...”
‌‌ "சூடா, நான்தான் உன் அப்பா, கண்ணே இந்த கலெக்டர் ஸார்தான் உன் சொந்தத் தகப்பன் ...!”
 “அப்படியா?...நிறுத்து, காப்பியைக் குடிக் காதே...” என்று உத்தரவிட்டாள் சூடா.
 காப்பித் தம்பளர் நழுவியது.
 “சூடா...அப்படிச் சொல்லாதே...” என்று குறுக் கிட்டாள் ருக்மிணி.
  ஆனால் மறுகணம், அருகிருந்த மருந்துப் புட்டி ஒன்றை எடுத்துக் கலெக்டர் மீது வீசினாள் சூடாமணி.
  தண்டபாணியின் நெற்றி மேட்டில் ரத்தக் குளம் தோன்றியது. 
  “ஐயோ!’ என்று சொல்லித் தன் கணவனை அண்டி, ரத்தத்தைத் துடைக்கப் போனாள் ருக்மிணி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/15&oldid=1468373" இலிருந்து மீள்விக்கப்பட்டது