பக்கம்:அந்தித் தாமரை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 55

மனேவியும் மகனும் மறு பிறப்புக் கொண்ட மகிழ்ச்சியில் அவனும் பழந்துயரங்களை மறக்கப் பழகின்ை. ஏர் பிடித்து மட்டிலுமே பழக்கப்பட்ட அவன் கரங்கள் கரணை, மட்டப்பலகை, நூல் கயிறு, ரசமட்டம், உளி போன்றவற்றைப் பிடிக்கத் தொடங்கின. கொத்து வேலையில் பயிற்சி பெற்று, தினக் கூலியாக கான்கு ருபாய்ச் சம்பளம் பெறும் தகுதி அடைந்து, காலத்தின் கைப்பிடியிலிருந்து காட்களைக் கழற்றி ஒட்டினன்.

சொந்த மச்சான் சின்னேயா, எனக்குக் குறைச்சல் பண்ணனுமின்னுதானே கண்ணுச்சாமி அம்பலத்தோதங்கமான மனசை மாத்தி, அவருக்கு கான் எழுதிக் கொடுத்த கோட்டை மேடோவர் வாங்கி எம்மேலே வழக்குத் தொடுக்கணும்னு கங்கணம் கட்டியிருக் கான்’ என்று எண்ணிப் புழுங்கிய பிரமன் உள்ளத்திலே பழைய சம்பவம் ஒன்றை கினேப்பூட்டியது காலம்.

போன வருசம் காளியம்மன் காப்புக்கட்டுத் திருநாளன்று சின்னையாவுக்கும் மாணிக்கத்துக்கும் அடிபிடி சண்டை ஏற்பட்டது; மாணிக்கம் மாங்குடி யைச் சார்ந்தவனே ! ‘தண்ணிர் இறைவை காரணமாக ஏற்பட்ட மனப்பிளவு அவ்விருவர் கைகளையும் ஒன்று சேர்த்து வைத்து அவர்களின் கைகளிலே வேப்பங் கழிகளையும் கொடுத்து வேடிக்கை பார்த்தது. அதிக மாகக் காயம்பட்டவன் மாணிக்கம். வழக்குத் தொடுத் தான் அவன். இதிலிருந்து தப்ப எண்ணிய சின்னேயா தன் பணம் ஆயிரத்தை மாணிக்கம் பறித்துக் கொண்ட தாகப் பொய் வழக்கைப் பதிலுக்குப் பதிவுசெய்து சாட் சிக்குப் பிரமனை அழைத்தான். பொய்ச்சாட்சி சொல்ல என்னுலே இந்த ஜன்மத்திலே வர ஏலாது!’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் பிரமன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/157&oldid=619637" இலிருந்து மீள்விக்கப்பட்டது