பக்கம்:அந்தித் தாமரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


கோட்டை எடுத்துக்கிட்டுப் பட்டுக்கோட்டைக்குப் புறப் பட்டுப்பிடுவாங்க உன்னுேட அப்பா!...”

அத்தையின் கண்களைத் துடைத்தாள் சிறுபெண், முத்துவும் பூவம்மாவும் அந்திநிலா மலர்ந்த வாசலில் ஒடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அத்தருணம், ‘பொன்னம்மா!...” என்று கோபமாக இரைச்சல் போட்டுக்கொண்டே வந்தான் பிரமன், ‘ஏ பொன்னம்மா! உன்னே யாரு உன் அண்ணன் வீட்டுக் குப் போகச் சொன்னது?...’ என்று கேட்டபடி அவளேக் கைநீட்டி அடிக்கப் போனன் அவன்.

ஓங்கிய கையைத் தாவிப் பிடித்துத் தடுத்த பிஞ்சுக்கை பூவம்மாவுக்குச் சொந்தம்.

‘பொன்னம்மா, வார குரைச்சல் வந்துதான் தீரும். ‘உன் அண்ணன் என் மேலே கேசு போட்டு, வாரண்டிலே பிடிக்கப் போருளும்; வீட்டை ஜப்தி பண்ணவும் போரும்ை!...... கறுப்பண்ணசாமி கண் முழிச்சுக் கிட்டு இருந்தா இப்படிப்பட்ட பொல்லாப்பெல்லாம் கடக்குமா ?. தெய்வத்தின் கண்களை சில மனிதர்கள் முடிப்பிட்டுத்தானே ஊர் உலகத்திலே தீய விளையாட்டு விளையாடத் தொடங்கிருங்க?... சரி, சரி ! நீ போய் வேலையைக் கவனி ‘ என்றான் பிரமன் கம்மிய குரலில்.

ஆடாப்ப்துமையென் அப்படியே நின்றள் சிறுமி

ஆபெமிட0ா. -

ஊர்ப் பிள்ளையார் கோயிலில் இராப்பூசனை கடக் தது. ஆலயமணி முழங்கியது.

பிரமனும் சிறுவன் முத்துவும் உணவு வட்டில்கள் முன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/162&oldid=1273134" இலிருந்து மீள்விக்கப்பட்டது