2
16
சாமிக்கண்ணு அம்பலம் மனம் திறந்து தன் மனைவி யிடம் கிலேமையை விளக்கிய சம்பவத்தைப் பிரமன் நினைவு கூர்ந்தான்.
சிறுமி பூவம்மா துருவித்துருவிக் கேட்கப்போக, கடந்த விவரத்தை விஸ்தரித்ததை எண்ணமிட்டாள் பொன்னம்மா.
வட்டிலைத் தள்ளிவிட்டு, கையலம்பிக் கொண்ட சிறுவன் முத்து, ‘பூவம்மா!’ என்று அலறிப் புடைத் துக்கொண்டு காற்றாய்ப் பறந்தான்!
‘ழ்வம்மா கண்ணே பூவம்மா!’ என்று புலம்பிக் கொண்டிருந்தான் சின்னையா.
‘கண்ணுமண்ணு தெரியாம கெற்றிப் பொட்டிலே அடிக்கலாமா சின்னையா? ...நீ பெத்த மகளையே இப்படி ஆத்திரப்பட்டு உதைச்ச நீ, உன் சொந்த மச்சானையே சீரழிக்க வைக்க நினைச்சது பெரிய அதிசயமில்லை!...” என்று பட்டவர்த்தனமாகப் பேசினர் நாட்டு வைத்தியர்.
சின்னேயா விழிநீர் வழிய மகளேயே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அ வ ன் மனைவி ஆரவல்லி வாய்விட்டுச் செருமிக்கொண்டி ருகதாள. -
“என்னுேட கோட்டுக்கு உண்டான பணம் அத்தனை யும் நீங்க முன்னடி சொன்னதுபோல நீங்கதான் தர வேனும், சின்னேயா!’ என்று விருப்புடன் எச்சரித்தார் கண்ணுச்சாமி அம்பலம்.
அனலிடை மெழுகாக உருகினன் சின்னேயா, மூடின கண்கள் திறக்காமல் கிடந்த அன்புப் புதல்வி மீது தலையைப் புதைத்துக் கதறினன்; அவள் எழுதி