15
நேரில் கண்டால் கொன்று போட்டுடுவே போலி ருக்கே...??"
“நிஜமா நீங்க என் அப்பா இல்லியா?”
"இல்லை".
’’கடவுளுக்குப் பொதுவாய்' உண்மையா?”
“ஆமாம்..."
"உண்மையா, அம்மா?"
“ஆமாம்...கண்ணே!”
“ஐயையோ, பாவம்! என்னை மன்னிச்சிடுங்க கலெக்டர் ஸார்! இதோ நொடியிலே போய் டாக்டரை அழைச்சு வர்றேன்...அம்மா, அவருக்கு காப்பி கொடு ...!"
சூடாமணி ஒடிவிட்டாள்.
கலெக்டர் தண்டபாணி சிறு குழந்தை போலச் செருமிக்கொண்டே பேசினர் : "ருக்மிணி, நீயாவது என்னை மன்னித்துவிடு. நம் வாழ்வில் இனியாவது ஆனந்தத் திருப்பம் வழிவிடுமென்று ஆசையோடு வந்தேன். குழந்தை சூடாவை அன்புடன் அனைத்து முத்தமிட ஓடோடி வந்தேன். இங்கே குழந்தை எரிமலை யாகி விட்டதே! நான் கொடுத்து வைக்காத பாவி, உன்னே இத்தனை காலம்' 'தள்ளி' வைத்ததற்குத் தண்டனை கிடைத்து விட்டது. அங்கே ஜூலாவை இழந்தேன். இங்கு என் குழந்தை என்னே 'அப்பா' என்று கூப்பிடக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன். குழந்தையின் முன்னிலையில் உன்னே'என் மனைவி’ என்று அழைக்கும் உரிமையையும் இழந்து விட்டேன். மகா பாவி, ருக்மிணி, நம் குழந்தையின் முன்னிலையில் அதன் ஆத்திரம் மாறும்வரை-நாம் இனி 'கணவன்-