இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவருடைய விழிவட்டத்தில் அவள் இரட்டை இரட்டை யாகத் தோன்றினாள்.
முதலில் அவர் ஏறிக் கொண்டு அப்புறம் சூடாவின் கைகளைப் பிடித்து ஆசனத்தில் அமர்த்தினர்.
"போய் வருகிறேன். ருக்மிணி" என்று விடை சொல்லிக் கொண்டார் தண்டபாணி.
வாசலில் ருக்மிணி ஒதுங்கி நின்றாள், தலையை அசைத்தாள்.
"அம்மாவும் நம்மோட... ஊஹூம், வேண்டாம். அவங்க வேறே ஆட்களோடே இப்படியெல்லாம் வர மாட்டாங்க. ஆமா, எங்க அம்மா உங்களுக்கு என்ன சொந்தம்...??
"துரத்து உறவு. ஒன்றுவிட்ட மாமா பெண்.” ‘என் ஓ, அ ப் ப டி ங் க ளா?... அம்மா...அம்மா...கான் போயிட்டு வர்றேன்..போயிட்டு வர்றேம்மா..." "போயிட்டு வா, கண்ணே!’ டிரைவரின் தலைக்குமேல் பொருத்தப் பட்டிருந்த பட்டைக் கண்ணுடியில் சூடா தன் உருவத்தை அழகு. பார்த்தாள். அவளைத் திரும்பிப் பார்த்த தண்டபாணி யின் நெற்றியில் போடப்பட்டிருந்த' பாண்டேஜ்
” தெரிந்தது. s
"இப்போது, வலி இல்லையே, ஸார்!’ என்று கேட் விட்டு, அவருடைய நெற்றிமீது தன் பிஞ்சுவிரல்களால் இதமுறத் தடவிக் கொடுத்தாள் சூடாமணி".
கலெக்டர் தண்டபாணி ஊர் பேர் தெரியாத ஒர் உலகத்திலே பைத்தியமாக அலைந்து தன் மகளைத் தேடிக் கொண்டிருந்தார்.