21
தழல் மீது நிற்பது போலிருந்தது ருக்மிணிக்கு திக்கெட்டும் கோக்கினுள். எங்கும் புதிர், புதிர்’ என்று எதிரொலித்தன.
புதிர்!-ருக்மிணியா? இல்லே, தண்டபாணியா? இல்லே, சூடாமணியா?
புதிரே, பதில் சொல்!
வாழ்க்கையே, பதில் சொல்!
விதியே, பதில் சொல்!
இமை வட்டங்களை அடித்தளமாக்கி, இமயமலை அரியாசனம் வகித்திருப்பது போல அத்துனே வலி எடுத்தது. அவள் அழுதாள். மடிமீது தவழ்ந்து கிடந்த அந்தப் புகைப்படத்தை மீண்டும் எடுத்தாள். அந்தப் படத்தில் அவளும் அவள் கணவர் தண்டபாணியும் மாலைகள் மந்தகாசம் புரிய மனக்கோலத்தில் காணப் பட்டார்கள். ‘உயிரும் உடலும் போல நீங்கள் இருவரும் பல்லுழி வாழ்க!’ என்று அனுபவ முதிர்ந்த வயோதி கர்கள் வழங்கின கல்லாசிச் சொற்கள், இப்போது அவள் காதுகளில் எதிரொலித்தன. கனவு கண்டாள். அவள்வரை எல்லாமே பகற் கனவு-உருப்படாத பக்ற் கனவு.
கடந்த பன்னிரண்டு வருஷங்களே இடைவெளி யாக்கி விட்டு, கணவன்-மனைவி என்ற பந்தத்தை மாத் திரம் இணை சேர்த்துக் கொடுத்த அத்தனை கடிதங்களை பும் கண்ணுேட்டம் விட்டாள்.
இறந்த காலத்துச் சம்பவங்களுக்கு நிகழ்கால உரிமை வழங்கப்பட்டது. ஏன் தெரியுமா?-ருக்மிணிக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காதிருக்கிறதே யென்று தான் !
அந்தி--2