பக்கம்:அந்தித் தாமரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

.

அவளுடைய உயிர் காடியைத் துண்டித்துக்கொண்டி ருந்தது. சித்திரவதை-கரக வேதனை-அம்மம்ம.

ருக்மிணி மண்டையில் அடித்துக்கொண்டாள். தலைமயிரைப் பிய்த்துக் கொண்டாள். திருச்சியில் இந்த கிசியில் அவளுக்கு மட்டுக்தான் இப்படிப்பட்ட தலைவிதியா? -

சூடா படுக்கையில் புரண்டு படுக்கும் அரவம் கேட்கவே, விசுக்கென்று அந்தப் போட்டோவை முத லில் டிரங்குப் பெட்டிக்கு அடியில் திணித்தாள். பிறகு அக்கடிதங்களையும் விசிறிப் போட்டாள்.

அன்றெரு நாள், அவள் தன் கதையைத் தன் மகளிடம் சொன்னபோது, ‘அம்மா, அந்த அப்பாவின் -இல்லை, நம் வைரியன் படம் ஏதாச்சும் இருந்தாக் கொடு. ஒரு நாள் இல்லாட்டி ஒரு காள் கேரிலே கண் டால் நல்ல பாடம் சொல்லித் தந்திடுவேன்...’ என்று சபதம் செய்த நிகழ்ச்சி அவள் மனக் கண்ணில் படம் காட்டிற்று.

ஒரு நாள் ருக்மிணியின் கணவன் கலெக்டர் தண்டபாணியாக ஆவலை அணைத்துக் கொண்டு, கனவுகளுக்கு வாழ்வு கொடுக்கும் ஆதூரத்துடன் அவளைத் தேடி வந்தாரே! “சூடா, நான்தான் உன் அப்பா, ‘கண்ணே இந்தக் கலெக்டர் ஸார்தான் உன் சொந்தத் தகப்பன் ...!” என்று அவர் உண்மையைச் சொன்ன போது, குழந்தை சூடாமணி வெறிகொண்டு, மருந்துச் சீசாவை அவர்மீது வீசிய நினைவு நாளே” ருக்மிணி எப்படி மறப்பாள்? -

தன் சொந்தக் கணவனின் நெற்றி மேட்டில் ரத்தம் கசிந்ததைக்கண்டு அவள் நெஞ்சில் ரத்தம் ஊற்றெடுத் ததை யார் அறிவார்கள்? யார் அறிக்தென்ன? சூடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/25&oldid=1273049" இலிருந்து மீள்விக்கப்பட்டது