பக்கம்:அந்தித் தாமரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


“ருக்கு, இன்றைப்பொழுதுக்கு சூடா இங்கு வராதல்லவா?

‘ஊஹல்ம்.’’

‘ருக்கு என்று கூப்பிட்டுக் கொண்டே, தண்ட பாணி மெல்ல அவளே அண்டினர். இதயத் துடிப்பும் இதயத் துடிப்பும் மெளன பாஷை பேசிக்கொண்டன. கண் இணையும் கண் இணையும் கயனபாவுை பேசிக் கொண்டன. அவருடைய விரல்கள் அவளுடைய கன்னங்களுக்குப் போதை ஏற்றின. அவளது கனி இதழ்களில் என்னவோ புரியாத ரகசியம் எழுதப்பட்டி ருந்தது. அது என்ன என்று படிக்க அவர் தலையைத் தாழ்த்தினர். அவள் வெளியேற்றிய பெருமூச்சின் உஷ்ணம் அவர் உடலில் சூடேறியிருந்த வெம்மையில் படிந்து, ‘அத்தான்-ருக்கு என்று எழுப்பிய ஒலியின் சிற்றலைகளைத் தவிர அங்கு வேறு சக்தடியே கிடையாது.

இன்பலோகம் சுழல எத்தனித்தது.

அப்போது

‘அம்மா, அம்மா!’ என்று கூப்பாடு போட்ட வண்ணம் ஓடோடி வந்தாள் சூடாமணி. அவளுக்கு முன் ஒடோடி முத்தமிட்டது அவள் தன் அன்னைமீது வீசிய அந்தப் பாவை விளக்கு. வலது கன்னத்தில் ரத்தம் பீறிட்டது.

தண்டபாணிக்குத் தலை கிறுகிறுத்தது.

ருக்மிணிக்கு மறுபடியும் மயக்கம் வரும்போலி ருந்தது.

‘பாவி, எத்தினி காளா இந்த நாடகம்? ஐயோ, எங்க அம்மாவைக் கெடுக்கப் பார்த்தியே?...’ என்று அலறிள்ை சிறுமி சூடாமணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/29&oldid=1273054" இலிருந்து மீள்விக்கப்பட்டது