பக்கம்:அந்தித் தாமரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


டவன் அவன். ஆபீஸ் முகப்பில் கண்ணுடி பீரோவில் ஷோவுக்கென வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய் கள்கூட அவனுக்கு அப்போதைய மனநிலையில் எழில். பூட்டித் திகழ்ந்தன!

சிந்தியில் ஆறு மணி ஆட்டம் காணப்போவோ ரும் வருவோருமாக, மக்களின் கூட்டம் கெரித்துக் கொண்டிருந்தது.

காமதேவன் கால் சட்டைப் பையில் கையை வைத்து, பர்ஸ்’ வைத்திருந்த உண்மையை உன்னிப் பாகக் கவனித்து ஆராய்ந்து கொண்டேயிருக்தான். இடது கையில் அன்றையப் பத்திரிகை இருந்தது. இலங்கைத் தமிழர் போராட்ட விவரங்களைப் படிப்ப தில் அவன் அக்கறை மிகக் கொண்டிருந்தான். சுருட்டி வைக்கப்பட்டிருந்த கைக் குட்டையில் பஸ் செலவுக் குரிய சில்லறைக் காசுகள் இருந்தன. கண்ணில்லாத கபோதி ஒருவன் யாசகம் கேட்டான். கொடுத்தான். கொண்டிக் கணவனைக் கரம்பற்றி அழைத்து அண்டி வந்து கின்ற ஏழைப் பெண் ஒருத்தி, காலணு கேட் டாள். அரையணுக் கொடுத்தான். அப்போது, அந்தப் பெண்ணைப் பார்த்த தருணம், அவனுக்குத் தன் உயிர்த் துணைவியின் ஞாபகம் பளிச்சிட்டது. அந்த ஏழை மனிதனைப் பார்த்து விட்டு, தன்னையும் ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டான் காமதேவன். உள்ளத் தின் நடுக்கம் நீங்கியது. அதேபோல, அவனிடமிருந்து இரண்டணு,நாணயமொன்றும் நீங்கியது; அந்த நொண்

டிக்குப் போட்டான் ! . ... “ -

மவுண்ட் ரோடு நாகரிகத்திற்கு கெடி எப்போதுமே சற்று அதிகந்தான்! இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/33&oldid=1273056" இலிருந்து மீள்விக்கப்பட்டது