பக்கம்:அந்தித் தாமரை.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்துப் பத்து மாதம்

த்மினி பாலமுதம் உண்டு கொண்டிருந்தாள்.

“பாமா!” என்று அலட்டினார் வள்ளிநாயகம். குரல் தேய்ந்திருந்தது; அன்பு தோய்ந்திருந்தது.

பாமா குழந்தையைப் பார்த்தாள்; குழந்தை அன்னையைப் பார்த்தது. முதற்பார்வையில் பதட்டம்;இரண்டாவது பார்வையில் பரிதாபம். பத்மினியைக் கையிலெடுத்துக் கொள்ள முனைந்தாள் பெற்றவள். அந்தச் சிரிப்பின் அமுத அலைகள் பாமாவின் இதழ்க்கடையிலே ஒதுங்கின; ஒளி சிந்தின.

“பாமா!” என்று அழைப்பை ஏந்திய வண்ணம் வள்ளிநாயகம் வந்துநின்றார். அவளுக்கு நாணம் பூத்தது. “இந்தா!...சும்மாகுடு, என்னமோ, நேத்தைக்குத்தான் வாக்கப்பட்டவ கணக்கிலே வெக்கப்படுறீயே?" என்றார். முகத்திலே நகை பூத்தது.

அந்தி வானம் அழகுக் கலையுணர்ச்சியுடன் வல்லமை பெற்றது.

“டிரஸ் செய்துக்க பாமா. 'புஹாரி'க்குப் போயிட்டு, அப்படியே படத்துக்குப் போறத்துக்குச் சரியாயிருக்கும். பேபியை எங்கிட்டக் குடு. அந்த டர்க்கி டவலை மடிமேலே போடு, பாமா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/41&oldid=1315811" இலிருந்து மீள்விக்கப்பட்டது